Published : 01 Jun 2021 07:19 PM
Last Updated : 01 Jun 2021 07:19 PM
நாப்கின் தயாரிக்க புதிய விதிமுறைகளை வகுக்கக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
பெண்கள் உபயோகிக்கும் நாப்கின், அதன் விலை, விளம்பரம் மற்றும் பேக்கேஜ் அடிப்படையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், நாப்கின் தயாரிக்கும் நிறுவனங்கள் அது எந்தெந்த பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது என் விபரங்களை தெரிவிப்பதில்லை.
சுகாதாரம் இல்லாத நாப்கின் பயன்படுத்துவதன் மூலம் பெண்களுக்கு புற்றுநோய், கருப்பை, சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது.
பெண்கள் தங்களது வாழ்நாளில் 11 ஆயிரம் முதல் 17 ஆயிரம் நாப்கின்களை பயன்படுத்துகின்றனர். அந்த நாப்கின்கள் சுகாதாரம் இல்லாமல் இருந்தால் பல்வேறு உடல் நலக்குறைபாடுகளை பெண்கள் சந்திக்க வேண்டியது வரும்.
எனவே, நாப்கின் தயாரிக்க புதிய விதிமுறைகள் வகுக்கவும், நாப்கின் மற்றும் குழந்தைகள் உபயோகிக்கும் டயப்பர் எந்த பொருள்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது என்ற விபரங்களை பாக்கெட்டுகளில் அச்சிடவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT