Published : 01 Jun 2021 12:24 PM
Last Updated : 01 Jun 2021 12:24 PM
நாகர்கோவில் பாஜக எம்எல்ஏ-வான எம்.ஆர்.காந்தி அனுதாப அலையால் வென்றவர். காந்தி ஏற்கெனவே ஏழுமுறை தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர். 75 வயதாகும் அவருக்கு ஆதரவாக வீசிய அனுதாப அலையே அவரது வெற்றியை எளிதாக்கியது. அனுதாபத்தால் வென்றாலும் அதை தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியில் தீவிரமாக இறங்கிவிட்டார் காந்தி. நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்று தெரிந்ததுமே ஐஎஸ்ஆர்ஓ மூலமாக அங்கு ஆக்ஸிஜன் சப்ளை செய்யவைத்த காந்தி, கடந்த வாரத்தில் கொட்டித் தீர்த்த கனமழையின் போது வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மீட்புப் பணிகளுக்காக களத்தில் இறங்கிவிட்டார். “அண்ணாச்சி... உங்களுக்கு வயசு ஆகிடுச்சு. உங்க உடம்பையும் பாத்துக்கங்க” என்று நலன்விரும்பிகள் சிலர் அட்வைஸ் செய்ததற்கு, “எனக்கு என்ன குடும்பமா குட்டியா..? எனக்கு எல்லாமே இந்த மக்கள் தான். இவங்களுக்காக நிக்காம யாருக்காக நிப்பேன்” என்று சொல்லி நெகிழவைத்துவிட்டாராம் காந்தி.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT