Last Updated : 25 Dec, 2015 10:05 AM

 

Published : 25 Dec 2015 10:05 AM
Last Updated : 25 Dec 2015 10:05 AM

2014-15-ம் ஆண்டில் 1,527 புகார்களுக்கு தீர்வு: தேசிய அளவில் சென்னை இன்சூரன்ஸ் குறைதீர்ப்பாளர் அலுவலகம் முதலிடம்

சென்னையில் உள்ள இன்சூரன்ஸ் குறைதீர்ப்பாளர் (ஆம்புட்ஸ்மேன்) கடந்த 2014-15-ம் ஆண்டில் 1,527 புகார்களுக்கு தீர்வு கண்டுள்ளதால் தேசிய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

வங்கி சேவைகள் தொடர்பான புகார்களை அளிப்பதற்காக வங்கி குறைதீர்ப்பாளர் இருப்பதுபோல் இன்சூரன்ஸ் சேவை தொடர்பான புகார்களை அளிக்க காப்பீட்டு குறை தீர்ப்பாளர் உள்ளார். 1998-ம் ஆண் டில் இன்சூரன்ஸ் ஆம்புட்ஸ்மேன் ஏற்படுத்தப்பட்டது. இங்கு காப்பீட்டு சேவைகள், காப்பீட்டு ஏஜென்ட்கள், காப்பீட்டு நிறுவனங்கள் தொடர்பான புகார்கள் விசாரிக்கப்பட்டு பாலிசி தாரர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தரப்படுகிறது.

இதற்காக சென்னை, பெங் களூரு, எர்ணாகுளம், ஹைதராபாத் உள்பட நாடு முழுவதும் 15 இடங் களில் காப்பீட்டு குறைதீர்ப்பாளர் அலுவலகங்கள் உள்ளன. கடந்த 2014-15-ம் ஆண்டு 1,527 புகார் களுக்கு தீர்வு கண்டதால் தேசிய அளவில் சென்னையில் உள்ள இன் சூரன்ஸ் குறைதீர்ப்பாளர் அலுவல கம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இதுகுறித்து, காப்பீட்டு குறை தீர்ப்பாளர் வீரேந்திர குமார் கூறியதாவது:

எங்கள் அலுவலக எல்லை வரம்புக்குள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு ஆயுள் காப்பீடு மற்றும் பொது காப்பீடு தொடர்பான புகார்கள் பெறப்பட்டு தீர்வு காணப்படுகிறது. இதன்மூலம், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தருகிறோம். இதன்படி, 2013-14-ம் ஆண்டில் 1,872 புகார் களுக்கும், 2013-14-ம் ஆண்டில் 1,952 புகார்களுக்கும் தீர்வு காணப்பட் டது. கடந்த 2014-15-ம் ஆண்டில் 1,527 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது. இதில், 14 புகார்கள் 2013-14-ம் ஆண்டில் நிலுவையில் இருந்தவை.

இதன் மூலம், நாட்டில் உள்ள 15 காப்பீட்டு குறைதீர்ப்பாளர் அலுவல கங்களில் சென்னை அலுவலகம் முதலிடத்தை பிடித்துள்ளது. அத் துடன், எந்த புகார்களும் நிலுவை யில் இல்லை என்ற நிலை எட்டப் பட்டுள்ளது. தீர்வு காணப்பட்ட 1,527 புகாரில் 993 புகார்கள் ஆயுள் காப்பீடு தொடர்பானவை. எஞ்சிய புகார் கள் பொது காப்பீடு தொடர் பானவை. ஆயுள் காப்பீடு தொடர் பாக பெறப்பட்ட 993 புகாரில், 427 புகார்கள் எல்ஐசி நிறுவனம் தொடர் பானவை. 566 புகார்கள் தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு எதிராக பெறப்பட்டவை. இவ்வாறு வீரேந்திர குமார் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x