Published : 30 May 2021 03:12 AM
Last Updated : 30 May 2021 03:12 AM
தமிழகத்தில் பிராமண சமூகத்தினர் பாதிக்கப்படுவதை தடுக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றுஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக ஆளுநருக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின்தலைமையிலான திமுக அரசின் ஆதரவால், பதற்றமான சூழல்உருவாகியுள்ளது. பிராமணர் களை குறிவைத்து, அவர்கள் மீதுவார்த்தை பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படுகிறது. இது ஜெர்மனியின் ஹிட்லர் தலைமையிலான நாஜி அரசின், தொடக்ககால நிகழ்வுபோல இருக்கிறது. குறிப்பாக பிராமணர் சமூகத்தின் ஆசிரியர்கள், பூசாரிகள் குறிவைக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்துதாங்கள் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும். இந்த நிலைக்கு திராவிடர் கழகம், திமுகவில் உள்ள சிலர்மற்றும் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள்தான் காரணம்.
புதிய அரசு தனது பணியை தொடங்கியுள்ள இந்த சூழலில், சட்டப் பிரிவு 356-ஐ பயன்படுத்த வேண்டும் என்று நான் கூறுவது பொருந்தாது. இருந்தாலும், இதுபோன்ற விஷயங்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். எனவே, தலைமைச் செயலரை அழைத்து, தற்போது தமிழகத்தில் பிராமணர்கள் பாதிக்கப்படுவது குறித்து அறிக்கை பெற்று அவருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இணையதள நிகழ்ச்சியில் பங்கேற்ற சுப்பிரமணியன் சுவாமி, ‘‘ஹிட்லர் காலத்தில் யூதர்கள் குறிவைக்கப்பட்டதுபோல, இப்போது ஒரு குறிப்பிட்டவகுப்பினர் குறிவைக்கப்படுகிறார்களோ என்ற கேள்வி எழுந்தது. அதனால்தான் ஆளுநருக்கு கடிதம் எழுதினேன், குறிப்பிட்ட ஒரு ஆசிரியர் தவறு செய்து, மாணவியின் புகாரும் இருக்கும் பட்சத்தில்,அவர் மீது நடவடிக்கை எடுப்பதுதவறல்ல. அதற்காக பள்ளியைஅரசே எடுத்துக்கொள்ளும் என்றெல்லாம் அமைச்சரே பேசுவது அதிகபட்சமானது.
எனக்கு ஸ்டாலின் மீது நன்மதிப்பு உண்டு. அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மீதும் மதிப்பு உண்டு. இந்த விஷயத்தில் அவர்கள் மென்மையான போக்கை கையாள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT