Published : 29 May 2021 01:53 PM
Last Updated : 29 May 2021 01:53 PM
தமிழகத்தில் சில ஐபிஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வுடன் இடமாற்றம் உட்பட 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.
உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்த உத்தரவு மாற்றப்பட்ட அதிகாரிகள் அவர்கள் முன்னர் வகித்த பதவி விவரம்:
1. அமலாக்கத்துறை சிறப்பு டிஜிபியாகப் பதவி வகிக்கும் கரன்சின்ஹா மாற்றப்பட்டு, தீயணைப்புத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
2. செயலாக்கத்துறை ஏடிஜிபியாகப் பதவி வகிக்கும் ஏ.கே.விஸ்வநாதன் மாற்றப்பட்டு, தமிழ்நாடு போலீஸ் வீட்டு வசதி வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
3. பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி ஆபாஷ் குமார் மாற்றப்பட்டு, உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
4. சென்னை தலைமையிட ஏடிஜிபி சீமா அகர்வால் சீருடைப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
5. சீருடைப் பணியாளர் தேர்வாணைய ஏடிஜிபி சந்திப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு, அமலாக்கத்துறை ஏடிஜிபி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். (இந்தப் பதவி டிஜிபி அந்தஸ்தில் இருந்து ஏடிஜிபி அந்தஸ்திற்கு நிலை இறக்கப்பட்டுள்ளது).
6. கடலோரப் பாதுகாப்புப் பிரிவு ஏடிஜிபி வன்னிய பெருமாள் மாற்றப்பட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
7. சமூக நலன் மற்றும் மனித உரிமை ஏடிஜிபி சைலேஷ்குமார் யாதவ் மாற்றப்பட்டு சென்னை காவலர் நலன் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
8. விரிவாக்கத்துறை ஏடிஜிபி சந்தீப் மிட்டல் மாற்றப்பட்டு, கடலோர பாதுகாப்புப் பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
9. வடக்கு மண்டல ஐஜி சங்கர் ஏடிஜிபியாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு, சென்னை தலைமையிட டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
10. மேற்கு மண்டல ஐஜி அமல்ராஜ் ஏடிஜிபியாகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு, செயலாக்கத் துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
11. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலர் ஜெயராமன் ஐஜி, ஏடிஜிபி ஆகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டு, சமூக நலன் மற்றும் மனித உரிமை ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
12. தானியங்கி மற்றும் கணினி மயமாக்கல் பிரிவு எஸ்.பி. வருண்குமார் மாற்றப்பட்டு, திருவள்ளூர் எஸ்.பி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT