Published : 25 Dec 2015 10:45 AM
Last Updated : 25 Dec 2015 10:45 AM

காலி தண்ணீர் பாட்டில்களால் பள்ளியின் கழிவறைக்கு மேற்கூரை: மாணவர்களின் புதிய முயற்சி

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் காலி தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு தங்களது பள்ளியின் கழிவறைக்கு மேற்கூரை அமைத்து மாற்றத்துக்கான வடிவமைப்பு விருதையும் பெற்றுள்ளனர் திருவாரூர் மாவட்டம் தண்டலை கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள்.

குஜராத் மாநிலம், அகமதாபாத் தில் செயல்பட்டு வரும் ‘டிசைன் பார் சேஞ்ச்’ என்ற அமைப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனித குலத்தை நல் வழிபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு தீர்வு காணும் வகை யில் நாடு முழுவதும் பள்ளிகளுக் கிடையேயான ‘ஐ கேன் ஸ்கூல் சேலஞ்ச்’ என்ற தலைப்பிலான போட்டியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

இந்த போட்டியில், திருவாரூர் மாவட்டம் தண்டலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யைச் சேர்ந்த 7 மற்றும் 8-ம் வகுப் புகளைச் சேர்ந்த டி.திலீப் குமார், பி.ஜெகன், எம்.குரு ஆதித்யன், ஜெ.பதி, எஸ்.ஹரிஹரன் ஆகிய மாணவர்கள் ஆசிரியர் டி.புண்ணிய மூர்த்தியின் வழிகாட்டுதலுடன் மேற்கூரை இல்லாத தங்களது பள் ளியின் கழிவறைக்கு பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு கூரை அமைத்து விருதையும் பெற்றுள்ள னர்.

பெற்றோர்கள் மற்றும் கிராம மக்களின் உதவியுடன் செங்கல், மணல், மரச்சட்டங்கள், பல்வேறு திருமண மண்டபங்களிலிருந்து பயன்படுத்தப்பட்டு, தூக்கி எறியப் பட்ட 6,000 காலி தண்ணீர் பாட்டில் களையும் சேகரித்தனர். இவற்றைக் கொண்டு பள்ளியின் கழிவறைக்கு மேற்கூரை அமைத்துள்ளனர். இது குறித்து ஆசிரியர் டி.புண்ணிய மூர்த்தி ‘தி இந்து’விடம் கூறியது:

எங்கள் பள்ளி வளாகத்தில் ஏராள மான மரங்கள் உள்ளன. இதிலி ருந்து விழும் இலைகள் மற்றும் பூ ஆகியவற்றால் கழிவறை முழு வதும் எப்போதும் அசுத்தமாக காட்சியளித்தது. இதனால் எப் போதும் துர்நாற்றம் வீசிக்கொண்டே இருந்தது. மேலும், மேற்கூரை இல்லாததால், மாணவர்கள் மழை நேரங்களில் சிறுநீர் கழிக்கச் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

இதற்கு தீர்வு காண சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு மேற்கூரை அமைக்க முடிவு செய்தோம். அதன்படி, காலி தண்ணீர் பாட்டில்களைச் சேகரித்து, அவற்றை இரண்டாக அறுத்து, ஓடு போல உருவாக்கி, அதை மரச்சட்டத்தில் பொருத்தி, கழி வறைக்கு ஏறத்தாழ 100 சதுர அடி மேற்கூரை அமைக்கப்பட்டது. இந்த பணிகளை ஒரு தச்சரின் உதவியுடன் குழு மாணவர்களே செய்து முடித்தனர்.

இந்த பணிகளை 3 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படமாக பதிவு செய்து, அதை ‘டிசைன் பார் சேஞ்ச்’ அமைப்பு நடத்திய போட் டிக்கு அனுப்பி வைத்தோம்.

நாடு முழுவதிலுமிருந்து வந்தி ருந்த 2,512 குறும்படங்களில் சிறந்த 100 மட்டும் தேர்வு செய்யப்பட்டது, இதிலிருந்து சிறந்த 20 திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டது. அதில் எங்கள் பள்ளியும் தேர்வானது.

இதற்கான விருது வழங்கும் விழா கடந்த 5, 6 தேதிகளில் அகமதா பாத்தில் நடைபெற்றது. இதில் எங்கள் பள்ளிக்கு ரூ.15,000 ரொக் கப் பரிசு, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த 50 நூல்கள் மற்றும் மாணவர்களுக்கு சான்றிதழ் கள் ஆகியவை வழங்கப்பட்டன என்றார் பெருமையுடன்.

விருது பெற்ற மாணவர்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர் மணி, தலைமையாசிரியர் கே.சண்முகம் மற்றும் கிராம மக்கள் பாராட்டினர்.

ஒவ்வொரு மாணவருக்குள்ளும் தனித்திறமைகள் ஒளிந்திருக் கின்றன. அவற்றை கண்டுபிடித்து ஊக்கப்படுத்தினால், அவை சமு தாயத்துக்கு பெரிதும் பயன்படும் என்பதற்கு இந்த பள்ளி மாணவர் களின் சாதனையை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x