Published : 27 May 2021 08:20 PM
Last Updated : 27 May 2021 08:20 PM
கரோனாவை தடுக்கும் விதம் குறித்த சிறந்த விழிப்புணர்வுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்படும் என, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் இன்று (மே 27) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
"திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில், கரோனா குறித்த விழிப்புணர்வும் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள், சுய உதவிக்குழுவினர் இணைந்து கரோனா பரவலை தடுக்கவும், தடுப்பூசியின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு பாடல்கள் மற்றும் நாடகங்கள், ஓவிய வரைப்படங்கள் ஆகியவற்றின் மூலம் தனிநபரோ அல்லது குழுவினர் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
கரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு பாடல்கள், வாசகங்கள், ஓவியங்கள், குறும்படங்கள் அடங்கிய தகவல்களை (ஒலி-ஒளி வடிவில்) covidawareness.mttpr@gmail.com அல்லது 79046-07583 என்ற வாட்ஸ் அப் எண்ணில் பதிவு செய்யலாம். இதில் தேர்வு செய்யப்படும் சிறந்த பதிவுகள் பல்வேறு வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் மாவட்டம் முழுவதும் அனுப்பி வைக்கப்படும். அது மட்டுமின்றி, சிறந்த விழிப்புணர்வு பதிவுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்படும்".
இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT