Published : 27 May 2021 01:13 PM
Last Updated : 27 May 2021 01:13 PM
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஜிப்மரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தம்பதியில் மனைவி உயிரிழந்ததால், கணவர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தம்பதி மற்றும் அவரது குடும்பத்தினர் ஜிப்மரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று காலை மனைவி இறந்த தகவல் கேட்டு துக்கமடைந்த 61 வயது கணவர் மருத்துவமனையில்நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை அங்கிருந்தோர் பார்த்து காப்பாற்றினர்.
இதுபற்றி ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு, "கரோனா தொற்றால் மனைவி உயிரிழந்ததால் தற்கொலைக்கு முயன்றவருக்கு முதலுதவிகள் அளித்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி உள்ளோம். நிலை ஆபத்தாக இருந்தாலும் தொடர்ந்து சீராக உள்ளது.
கோவிட் தொற்று நோய் உடல் அளவில் மட்டுமில்லாமல் மனதளவிலும் நோயாளிகளையும் அவர்களது குடும்பத்தாரையும் பாதிக்கிறது. மனதளழில் கடும் பாதிப்பு உள்ளோம், கரோனா தொற்றால் பெரும் இழப்பை சந்தித்தோர், தற்கொலை எண்ணம் உள்ளோர் உடனடியாக மருத்துவர்கள் ஆலோசனை பெறுவது முக்கியம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT