Published : 27 May 2021 12:31 PM
Last Updated : 27 May 2021 12:31 PM
கரோனா ஒழிப்புப் பணியில் தொண்டு நிறுவனங்கள் அரசுடன் இணைந்து இயங்க மாநில, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்ப்ய் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக்குழுக்கள் இணைந்து இயங்க பதிவு செய்ய இணையதள முகவரி உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:
“மே.19 அன்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கரோனா பெருந்தொற்று நோய் இரண்டாம் அலை பரவலை தடுக்கும் வகையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தான கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், கரோனா பெருந்தொற்று நோயை ஒழிக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து செயல்பட, மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாவட்டங்களும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து செயல்பட மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநில அளவிலான இந்த ஒருங்கிணைப்புக் குழு தேனாம்பேட்டையில் அமைந்துள்ள தேசிய சுகாதார இயக்க வளாகத்தில் இயங்கி வரும் கட்டளை மையத்தில் (War Room – Unified Command Centre) தனது பணிகளை மேற்கொண்டு வருகிறது. தன்னலம் கருதா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் பெருந்தொழில் நிறுவனங்கள் https://ucc.uhcitp.in/ngoregistration என்ற இணையதளத்தில் தங்களை பதிவு செய்து மக்களுக்கு உதவும் பெரும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழுவால் https://www.facebook.com/tnngocoordination/ என்ற முகநூல் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. மேலும், 8754491300 என்ற அலைபேசி எண் மூலமாகவும், tnngocoordination@gmail.com என்ற இணையதளம் வாயிலாகவும் மாநில ஒருங்கிணைப்புக் குழுவை தொடர்பு கொள்ளலாம்”.
இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT