Last Updated : 08 Dec, 2015 10:21 AM

 

Published : 08 Dec 2015 10:21 AM
Last Updated : 08 Dec 2015 10:21 AM

உயர் நீதிமன்றத்தில் முன்னறிவிப்பு வழக்கு பட்டியல் வெளியிடும் நடைமுறை அமல்: வழக்கறிஞர்கள் வரவேற்பு

வழக்குகளை விரைவில் விசாரித்து முடிப்பதற்காக இருதரப்பு வழக்கறி ஞர்களும் தயாராக வருவதற்கு வசதியாக முன்னறிவிப்பு வழக்கு பட்டியல் வெளியிடும் நடைமுறை உயர் நீதிமன்றத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்றுள் ளனர்.

சென்னை உயர் நீதிமன்றம் மற் றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள ஒவ்வொரு நீதிமன் றங்களிலும் தினமும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வழக்கு களின் பட்டியல் முதல் நாள் இரவில் நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்படும். பின்னர் அந்தப் பட்டியல் புத்தகமாக அச்சிடப்பட்டு, காலையில் வழக்கறிஞர்களின் வீடுகளுக்கு விநியோகம் செய்யப் படுகிறது.

இந்த முறையால் வெளியூர் வழக் கறிஞர்களும், வழக்கு தொடர்ந்த வர்களும் தங்களது வழக்கு எப்போது விசாரணைக்கு வரும் என்பதை முதல் நாள் இரவு அல்லது அன்று காலையில்தான் அறிய முடிகிறது. இதனால் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் வழக்குக்கு தயா ராக வருவதிலும், வெளியூர் சென்றிருந்தால் ஆஜராவதிலும் சிரமம் ஏற்படுகிறது.

இந்த சிரமங்களை கருத்தில் கொண்டு, தினப்பட்டியலுடன் குறிப்பிட்ட நாள்களுக்கு ஒவ்வொரு நாளிலும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வழக்குகளின் பட்டி யலை முன்கூட்டியே வெளியிடும் நடைமுறை உயர் நீதிமன்றத்தில் தற் போது அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே உயர் நீதிமன்றத் தில் நீண்டகாலமாக நிலுவையில் இருந்துவரும் வழக்குகள், பெண் கள் தொடர்பான வழக்குகளை விரைவில் முடிப்பதற்காக அந்த வழக்குகளை ஒவ்வொரு புதன் கிழமையும் விசாரணைக்கு எடுத் துக் கொள்ளுமாறு தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இத னால் புதன்கிழமை தவிர்த்து மற்ற நாள்களில் விசாரிக்கப்படும் வழக்குகளை முடிவு செய்து, அதுதொடர்பாக முன்னறிவிப்பு பட்டியல் வெளியிடப்பட்டு, அந்தப் பட்டியல் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்படுகின்றன.

உயர் நீதிமன்ற மதுரை கிளை யில் முதல்முறையாக நீதிபதி எஸ்.வைத்தியநாதன், அவர் விசா ரிக்கும் நீதிமன்றத்தில் டிச. 18 வரை விசாரணைக்கு எடுக்கப்படும் வழக்குகளின் பட்டியல் முன்கூட் டியே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும், சமரச வழக்குகளும் தனியாக பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்த நீதிமன்றத்தில் தினப்பட்டி யலில் இடம்பெற்று பல்வேறு காரணங்களுக்காக ஒத்திவைக் கப்படும் வழக்குகள்,

ஒத்திவைக்கப் பட்ட நாளில் முன்னறிவிப்பு பட்டி யலுக்குப் பிறகு விசாரணைக்கு எடுக்கப்படுகிறது. இந்த முறையை வழக்கறிஞர்கள் வரவேற்றுள்ளனர்.

இது தொடர்பாக வழக்கறிஞர் கே.நீலமேகம் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

முன்னறிவிப்பு பட்டியல் முறை வரவேற்புக்குரியது. இந்த முறையால் தங்களது வழக்கு விசாரணைக்கு வரும் நாளை முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடிகிறது. வழக்கை மேலும் இழுத் தடிக்காமல், குறிப்பிட்ட நாளில் முடிப்பதற்கு இருதரப்பு வழக்கறிஞர்களும் தயாராக வரமுடியும்.

அந்த வழக்கில் ஆஜராவதற்கு ஏற்றவாறு வெளியூர் வழக்கறிஞர்களும், மூத்த வழக்கறிஞர்களும் தங்களின் பயணத் திட்டத்தை வகுத்துக்கொள்ளவும், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஆவணங்களை முன்கூட்டியே தயார்செய்து விசா ரணைக்கு வரும் நாளில் நீதிமன் றத்தில் தாக்கல் செய்ய முடியும். நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் தொடர்புடைய அதிகாரிகள், நீதி மன்ற உத்தரவை நிறைவேற்றிய தற்கான ஆவணங்களுடன் வந்து நீதிமன்ற நடவடிக்கையில் இருந்து தப்புவதற்கு வாய்ப்பு ஏற்படும். இந்த முறையை அனைத்து நீதி மன்றங்களிலும் அறிமுகம் செய்ய வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x