Published : 26 May 2021 03:15 AM
Last Updated : 26 May 2021 03:15 AM

கரோனா நோயாளிகளுடன் தங்கியுள்ள உறவினர்களுக்கு இலவச உணவு வழங்கல்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுடன் தங்கியுள்ள உறவினர்களுக்கு பசுமை தாய்நாடு அறக்கட்டளையினர் உணவுகளை வழங்கினர்.

திருப்பத்தூர்

கரோனா நோயாளிகளுடன் தங்கியுள்ள உறவினர்களுக்கு திருப்பத்தூரைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்தினர் காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளவர்கள் அரசு மருத்து வமனை மற்றும் கரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவியாக நோயாளிகளின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உடன் தங்கி நோயாளி களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.

கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மருத்துவமனை சார்பில் சத்து மிகுந்த உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், உடன் தங்கியுள்ளவர்களுக்கு உரிய நேரத்தில் உணவு கிடைப்ப தில்லை. மாறாக, வெளியே சென்று உணவு வாங்கவும் அவர்கள் அச்சப்படுவதால் பலர் உணவின்றி சிரமப்பட்டும், சில நேரங் களில் பட்டினியுடன் இருப்பதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து வந்த தகவலின் பேரில், திருப்பத்தூர் வட்டம், ஏரிக்கோடி பகுதியில் உயர்கல்வி முடித்த இளைஞர்கள் 50 பேர் ஒன்று சேர்ந்து தொடங்கிய ‘பசுமை தாய்நாடு அறக்கட்டளை’ என்ற தொண்டு நிறுவனம் சார்பில், கரோனா நோயாளிகளுடன் தங்கி யுள்ள உறவினர்கள் மற்றும் குடும்ப நண்பர்களுக்கு தினசரி 2 வேலை இலவச உணவு வழங்க முன் வந்தனர்.

அதன்படி, திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மற்றும் கரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வரும் 350 நோயாளிகளின் உறவினர்களுக்கு காலை மற்றும் மதிய நேரத்தில் இலவச உணவை பசுமை தாய் நாடு அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தினர் செய்து வருகின்றனர்.

இது மட்டுமின்றி கரோனா முழு ஊரடங்கால் சாலையோரங்களில் ஆதரவற்றுக் கிடக்கும் நூற்றுக் கும் மேற்பட்ட மக்களுக்கு இந்த அறக்கட்டளையினர் மதிய உணவை இலவசமாக வழங்கி வருகின்றனர். கரோனா பெருந் தொற்றால் அவதிப்படும் ஏழை, எளிய மக்களுக்கு தேவையான உதவிகளை இத்தொண்டு நிறுவனத்தினர் தொடர்ந்து செய்து வருவதை அறிந்த மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் ஆகியோர் படித்த இளைஞர்களின் மனிதாபி மான செயலை கண்டு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x