Published : 25 May 2021 08:10 PM
Last Updated : 25 May 2021 08:10 PM

மருத்துவமனை காலி படுக்கைகளின் விவரங்கள் குறித்த தகவல்களைப் பெற கட்டுப்பாட்டு அறை எண் வெளியீடு: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கோவிட் தடுப்பூசி மற்றும் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்குத் தேவையான மருத்துவமனை காலி படுக்கைகளின் விவரங்கள் குறித்த தகவல்களைப் பெற மாநகராட்சியின் 1913 என்ற எண்ணிலும், 044-2538 4520 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (மே 25) வெளியிட்ட அறிவிப்பு:

"பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கும் தேவையான மருத்துவ மற்றும் அடிப்படை உதவிகளை மேற்கொள்ள மாநகராட்சியின் சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு பல்வேறு உதவி எண்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கோவிட் பாதுகாப்பு மையங்கள், மருத்துவமனை காலி படுக்கைகளின் விவரங்கள், கோவிட் தொற்று ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனை, தடுப்பூசி குறித்த தகவல்கள் மற்றும் மயானபூமி குறித்த விவரங்களைப் பெறவும், இது தொடர்பான புகார்களைத் தெரிவிக்கவும் மாநகராட்சியின் 1913 என்ற எண்ணிலும், 044-2538 4520 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

ககன்தீப் சிங் பேடி

மேலும், மாநகராட்சியின் சார்பில் கோவிட் தொற்று பாதித்த நபர்களுக்கும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கும் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக, பெருநகர சென்னை மாநகராட்சி தலைமையிடத்தில் 100 இணைப்புகள் கொண்ட 044-4612 2300 என்ற எண்ணில் மனநல ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது.

பொதுமக்கள் காணொலி வாயிலாக மருத்துவ ஆலோசனைகள் பெற gccvidmed என்ற செயலி ஏற்கெனவே செயல்பட்டு வருகிறது. பொதுமக்களுக்குக் காணொலிக் காட்சி வாயிலாக மருத்துவ ஆலோசனைகளை வழங்க மேலும் கூடுதலாக 94983 46510, 94983 46511, 94983 46512, 94983 46513, 94983 46514 வாட்ஸ் அப் எண்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கோவிட் தொற்று தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்கள் குறித்துக் கட்டுப்பாட்டு அறை எண்களிலும் (1913, 044-25384520), மனநல ஆலோசனைகளைப் பெற சிறப்பு தொலைபேசி எண்ணிலும் (044-4612 2300), காணொலி வாயிலாக மருத்துவ ஆலோசனைகள் பெற gccvidmed என்ற செயலி மற்றும் 94983 46510, 94983 46511, 94983 46512, 94983 46513, 94983 46514 வாட்ஸ் அப் எண்களின் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம் என ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்".

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x