Published : 25 May 2021 04:34 PM
Last Updated : 25 May 2021 04:34 PM
சென்னை மருத்துவமனைகளில் கரோனா அல்லது இதர காரணங்களால் இறந்தவர்களின் உடல்களை மயானபூமிகளுக்கு கொண்டு செல்வதற்கு மாநகராட்சியின் சார்பில் வழங்கப்பட்டுள்ள 15 ஊர்திகளின் சேவையை பெற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொள்ளலாம் சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பு வருமாறு:
“தமிழக அரசின் சார்பில் மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்ல இலவச அமரர் ஊர்தி வாகனங்களின் சேவை இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இந்த இலவச அமரர் ஊர்தி வாகன சேவையை பெற 155377 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் செயல்பட்டு வருகிறது.
தற்போதைய பேரிடர் காலத்தில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள மருத்துவமனைகளில் கரோனா வைரஸ் தொற்று அல்லது இதர காரணங்களால் இறந்தவர்களின் உடல்களை மயானபூமிக்கு கொண்டு செல்வதற்கு மாநகராட்சி சார்பில் 15 அமரர் ஊர்தி வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த 15 வாகனங்களும் இந்திய செஞ்சிலுவை சங்கத்திடம் மாநகராட்சியின் சார்பில் இன்று வழங்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள மருத்துவமனைகளில் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்வதற்காக இந்த 15 வாகனங்களும் பயன்படுத்தப்படவுள்ளது. இந்த இலவச அமரர் ஊர்தி சேவையை பெறவும் 155377 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்”.
இவ்வாறு மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT