Published : 08 Jun 2014 12:35 PM
Last Updated : 08 Jun 2014 12:35 PM
அண்மையில் உயிரிழந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண் டேவுக்கு அஞ்சலி செலுத்தி காஞ்சி புரம் நகர பாஜக சார்பில் ஒட்டப் பட்ட இரங்கல் போஸ்டரில் மகா ராஷ்டிரா மாநில முதல்வரின் படம் அச்சிட்டப்பட்டிருந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய பாஜக அரசில் ஊரக வளர்ச்சிதுறை அமைச்சராக இருந்த கோபிநாத் முண்டே கடந்த 3-ம் தேதி வாகன விபத் தில் சிக்கி மாரடைப்பால் மரண மைடந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாடு முழுவ தும் பாஜக தொண்டர்கள் கட்சி அலுவலகத்தில் முண்டேவின் உருவபடத்துக்கு புதன்கிழமை மாலையிட்டு அஞ்சலி செலுத்தினர்.
காஞ்சிபுரத்தில் நகர பாஜக கட்சி நிர்வாகிகள் சார்பில் கட்சி அலுவலகத்தில் முண்டேவின் உரு படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில், இறந்த அமைச்சரின் உருவப்படத்துக்கு பதிலாக தற்போது உயிருடன் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மகராஷ்டிரா மாநி லத்தின் முதல்வருமான பிரித்திவி ராஜ் சவுகான் படத்தை வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், அதே படத்தை கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களாக அச்சிட்டு, நகரம் முழுவதும் ஓட்டியுள் ளனர். இந்நிலையில் போஸ்டரில் உள்ள படம் அமைச்சரின் உருவ படம் அல்ல என தாமதாக கட்சி நிர்வாகிகள் உணர்ந்துள்ளனர். இதையடுத்து நகரத்தின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் சிலவற்றை கிழித் தனர். இதனால், காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT