Published : 20 May 2021 03:13 AM
Last Updated : 20 May 2021 03:13 AM
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் கரோனா நோயாளிகளை அழைத்துச் செல்ல தனது சொந்த காரை ஆம்புலன்ஸ் சேவைக்காக வட்டாட்சியர் ஒப்படைத்தார்.
இளையான்குடி வட்டத்தில் இளையான்குடி பேரூராட்சி மற்றும் 55 ஊராட்சிகள் உள்ளன. ஆனால், ஒரே ஒரு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மட்டுமே உள்ளது. தற்போது கரோனா தொற்றால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசு ஆம்புலன்ஸ் பற்றாக்குறையால் தனியாரிடம் கூடுதலாக பணம் கொடுத்து வாடகைக்கு எடுக்கும் நிலை உள்ளது. இதனால் கிராமப்புற ஏழைகள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதையடுத்து இளையான்குடி வட்டாட்சியர் ஆனந்த் தனது சொந்த வாகனத்தை ஆம்புலன்ஸ் சேவைக்காக `பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' அமைப்பிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்த அமைப்பு அந்த வாகனத்தை படுக்கை, ஆக்சிஜன் வசதியுள்ள ஆம்புலன்ஸாக மாற்றியுள்ளது. மேலும் இந்த வாகனத்தை 97501 08575 என்ற எண்ணில் தொடர்புகொண்டு அனைவரும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். இது குறித்து`பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' உமர் கூறுகையில், கரோனா நோயாளிகளுக்கு உதவ ஆம்புலன்ஸ் சேவை தொடங்க முடிவு செய்து வட்டாட்சியரிடம் தெரிவித்தோம். அவர் உடனடியாக தனது வாகனத்தைக் கொடுத்து உதவினார் என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT