Published : 17 May 2021 01:49 PM
Last Updated : 17 May 2021 01:49 PM

கீழ்ப்பாக்கம், மதுரை உள்ளிட்ட 8 அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்கள் மாற்றம்: அரசு உத்தரவு

சென்னை

கீழ்ப்பாக்கம், மதுரை உள்ளிட்ட 8 அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றது. தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றது முதல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். தொடர்ந்து மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கரோனா பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளை முதல் நடவடிக்கையாகக் கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது.

மருத்துவம் சார்ந்த செயல்பாடுகளில் அனைத்துத் துறைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. கரோனா பரவலைத் தடுப்பது, சிகிச்சை அளிப்பது உள்ளிட்டவற்றை முன்னுரிமைப் பணியாகக் கொண்டு அரசு செயல்படுகிறது.

இந்நிலையில் 8 அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களை மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி முதல்வர்களே மருத்துவமனையின் டீனாகவும் செயல்படுவர். இதற்கான உத்தரவை சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.

மாற்றப்பட்டவர்கள் விவரம்:

1. மருத்துவக் கல்வி இயக்குனரகத் தேர்வுக்குழு செயலராகப் பதவி வகிக்கும் சாந்திமலர் மாற்றப்பட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2. கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த வசந்தாமணி மாற்றப்பட்டு, மருத்துவக்கல்வி இயக்குனரகத் தேர்வுக்குழுச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

3. மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சங்குமணி மாற்றப்பட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

4. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் மாற்றப்பட்டு, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

5. சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி முதல்வர் முருகேசன் மாற்றப்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

6. திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி மாற்றப்பட்டு, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

7. கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை முதல்வர் சுகந்தி ராஜகுமாரி மாற்றப்பட்டு, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

8. விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் திருவாசகமணி மாற்றப்பட்டு, கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சுகாதாரத்துறைச் செயலர் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x