Published : 14 Dec 2015 03:56 PM
Last Updated : 14 Dec 2015 03:56 PM
கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல், வாழை, ரப்பர் விவசாயத்தில் பேரிழப்பை சந்தித்த விவசாயிகள், அதைப் பொருட்படுத்தாது தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தங்களால் இயன்ற நிவாரண நிதியை வழங்கியுள்ளனர்.
சென்னை, கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பெரும் இன்னலை சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வெள்ள நிவாரண நிதிகள் குவிந்து வருகின்றன. குமரி மாவட்ட நிர்வாகம் பொதுமக்களிடம் இருந்து ரூ. 84 லட்சத்துக்கும் மேற்பட்ட நிவாரண நிதி மற்றும் பொருட்களை திரட்டி அனுப்பியுள்ளது. இதில், தங்களின் பங்களிப்பாக குமரி மாவட்ட விவசாயிகளும் நிதி உதவி வழங்கியுள்ளனர்.
குமரி மாவட்டத்தில் ரப்பர், நெல், வாழை சாகுபடி செய்த விவசாயிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இழப்பை சந்தித்து வருகின்றனர். போதிய வருவாய் இல்லாமல் விவசாயிகளும், தொழிலாளர்களும் அவதிய டைந்து வருகின்றனர். இந்த நிலையிலும், தங்களால் இயன்ற உதவியை அவர்கள் வழங்கி யுள்ளதை சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.
இதுகுறித்து விவசாயி தங்கப்பன் கூறும்போது, “போதிய வருமானம் கிடைக்காததால், வாங்கிய கடனை அடைக்க முடியாமல் விவசாயிகள் சிரமப்படு கின்றனர். கனமழையால் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டது. அதற்கான இழப்பீடும் இதுவரை கிடைக்கவில்லை.
கடும் இழைப்பை சந்தித்து வரும் எங்களுக்கு, சென்னையில் மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை பெரும் மனவேதனையை அளித்தது. வசதியாக வாழ்ந்தவர்கள் அடிப்படை தேவைக்காக கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட் டுள்ளனர். எனவே, எங்களால் முடிந்த அளவு உதவி செய்ய முயற்சி எடுத்தோம். ஒவ்வொரு விவசாயியும் 200 ரூபாயில் இருந்து தங்களால் இயன்ற நிதியை அளித்தனர். அதை ஆட்சியரிடம் வழங்கியுள்ளோம்” என்றார்.
குமரி மாவட்ட பாசனத்துறைத் தலைவர் வின்ஸ்ஆன்றோ கூறும்போது, “பூமி பாதுகாப்பு சங்க தலைவர் பத்மதாஸ், விவசாய பிரதிநிதிகள் தாணுபிள்ளை, மருங்கூர் செல்லப்பா, புலவர் செல்லப்பா, தேவதாஸ், திரவியம் உள்ளிட்டோர் இணைந்து நிவாரணத் தொகையை திரட் டினர். முதல் தவணையாக குமரி மாவட்ட ஆட்சியரிடம் ரூ.36,500 வழங்கியுள்ளோம். மேலும் நிவாரண உதவி வழங்க விவசாயிகள் முயற்சி மேற் கொண்டு வருகின்றனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT