Published : 16 May 2021 05:33 PM
Last Updated : 16 May 2021 05:33 PM

ஒடிசா மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு ஆக்சிஜன் கொண்டுவருவதை கண்காணிக்க 2 அதிகாரிகள் நியமனம்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

ஒடிசா மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு ஆக்சிஜன் கொண்டுவருவதை கண்காணிக்க 2 அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான தமிழக அரசின் அரசாணை:

"தமிழக முதல்வர் தமிழ்நாட்டில் நிலவிவரும் ஆக்சிஜன் பற்றாக்குறையைத் தீர்க்க மத்திய அரசிடம் தெரிவித்ததன் அடிப்படையில், ஒடிசா மாநிலத்திலுள்ள கலிங்கா நகர், ரூர்கேலா ஆகிய இடங்களில் நாள் ஒன்றுக்கு 100 எம்.டி வீரம் ஆக்சிஜன் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், தற்பொழுது 100 எம்.டி தமிழ்நாட்டுக்குப் பெறப்பட்டுள்ளது. இந்த ஆக்சிஜனை தமிழ்நாட்டில் ரயில்கள் மூலம் தொடர்ந்து பெறுவதற்கு விமானங்கள் மூலம் டேங்கர்களை ஒடிசா மாநிலத்திற்கு அனுப்பி அங்கு அவற்றில் ஆக்சிஜனை நிரப்பி பின்னர் ரயில்கள் மூலம் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த கீழ்க்கணும் இரண்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1. நிஷாந்த் கிருஷ்ணா, ஐஏஎஸ், ரூர்கேலா நகரின் ஒருங்கிணைப்புப் பணிகளை கவனிப்பார்.

2. பெரியசாமி, இந்திய வனப்பணி, (வன பாதுகாவலர்) புவனேஸ்வர் மற்றும் கலிங்கா நகர் ஆகிய இடங்களில் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை கவனிப்பார்.

இந்த அதிகாரிகள் உடனடியாக ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ள ஒடிசா மாநிலத்திற்கு விரைந்தனர்".

இவ்வாறு தமிழக அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x