Published : 05 Dec 2015 09:51 AM
Last Updated : 05 Dec 2015 09:51 AM
பரந்து விரிந்த பூலோகத்தை விருப்பு, வெறுப்பின்றி தாங்கி நிற்கும் மண் வளத்தைப் பாதுகாக்க, உலக மண் தினமான இன்று (டிச. 5-ம் தேதி) அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என பேராசிரியர் சி.சுவாமிநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.
‘மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை, மனிதன் மீது மண்ணுக்கு ஆசை, மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது, இதை மனம்தான் உணர மறுக்கிறது’ என்ற பாடல் நம்மை தாங்கி நிற்கும் மண்ணின் மகத்துவத்தைப் பறைசாற்றுகிறது. பஞ்சபூதங்களில் ஒன்றான நிலத்தின் ஆதாரமாக விளங்கும் மண்ணின் முக்கியத்துவம், அதன் வளம், மனிதனின் வாழ்வில் மண்ணின் பங்கு, மண் இன்றி மனிதன் இல்லை ஆகியவை குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ளது.
இதுகுறித்து மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் உழவியல் துறைத் தலைவர் சி.சுவாமிநாதன், ‘தி இந்து’ விடம் நேற்று கூறியதாவது:
மண்ணில் 25 சதவீதம் காற்று, 25 சதவீதம் நீர், 45 சதவீதம் உலோகப் பொருட்கள், 5 சதவீத அங்ககப் பொருள்கள் அடங்கியுள்ளன. மேல் பரப்பில் சுமார் 2.5 செ.மீ. ஆழத்தில் காணப்படும் டாப் சாயில் உருவாக சுமார் ஆயிரம் ஆண்டுகளாகும். மேல்மண் மிகவும் வளம் வாய்ந்தது. விவசாயம் செழிப்படையச் செய்கிறது.
மேல் மண்ணின் தன்மையைப் பொறுத்தே பயிர் விளைச்சல் அமைகிறது. சுமார் ஒரு கிராம் மேல்மண்ணில் கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள், பூஞ்சைக் காளான் கள், பல லட்சம் ஆக்டினோமைசீட்ஸ் நுண்ணுயிரிகள் உள்ளன. இந்த நுண்ணுயிரிகள் பெரும்பாலும் நமக்கு நன்மை புரிகின்றன.
மண்ணின் தன்மை அறிந்து பல வகைகளில் பயன்படுத்தப் படுகிறது. ஆனால், தற்போது மண் ணின் முக்கியத்துவம் உணராமல் பாழ்படுத்துவதில் முனைப்பு காட் டப்படுகிறது. மண்ணுக்கும், மனி தனுக்கும் இடையே சில வேறு பாடுகள்தான் உள்ளது.
மண்ணுக்கும் உயிர் உண்டு. மனித உடலில் நடைபெறும் பல் வேறு வகையான வினை சார்ந்த செயல்களான செரிமானம், சுவாசம், வெப்பநிலை வேறுபாடு போன் றவை மண்ணிலும் நடைபெறு கின்றன. எண்ணிலடங்கா உயிரி னங்களின் ஆத்மாக்களின் கலவைதான் மண். பெற்றோரின் குணாதிசயங்களை மனிதன் பிரதிபலிப்பது போல, பாறையின் குணாதிசயத்தை மண் பிரதிபலிக் கிறது.
மனித உடலில் உள்ள செரிமான சக்தியைப் போல், மண்ணில் பிளாஸ் டிக் தவிர்த்து அனைத்து பொருட் களும் செரிமானம் அடைந்து உருமாற்றம் பெறுகிறது. மனிதன் காற்றை சுவாசித்து கார்பன்-டை- ஆக்சைடை வெளியிடுவது போல மண்ணிலும் நடைபெறுகிறது. மனி தன் உடல் பெரும்பாலான பகுதி நீரால் நிரப்பப்பட்டது. மண்ணில் நான்கில் ஒரு பங்கு நீர் உள்ளது.
மண் சிந்தனை ஏதுமின்றி தன்னா லான பங்களிப்பை உலகுக்கு வழங்கி வருகிறது. மனிதர்களால் பல்வேறு இடையூறுகளை சந்தித்த போதிலும், எந்தவித வேறுபாடும் காட்டாமல் மனிதனை தாங்கி நிற்கிறது மண். மண் நிரந்தரமானது. நாட்டின் முன்னேற்றத்துக்கு, மேம் பாட்டுக்கு மரங்கள் மட்டுமின்றி மண் வளமும் இன்றியமையாதது.
இதை உணர்ந்தே நமது மூதாதையர்கள் மரங்களோடு இணைந்து, மண் வளம் நிரம்பிய நிலங்களில் பயிர் சாகுபடி, அங்கி ருந்து பெற்ற தரமான உணவுகளை உட்கொண்டு வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நடத்தினர்.
அந்த மகிழ்வான வாழ்வு மீண்டும் வர வேண்டும். மண்ணின் வளத்தை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT