Published : 16 Dec 2015 08:19 AM
Last Updated : 16 Dec 2015 08:19 AM
தமிழகத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டபோது, சேவை சார்ந்த செயல்பாடுகளில் அரசின் துறை கள், நிறுவனங்கள் பெரிதும் செயல் பட்டு பொதுமக்களின் நம்பிக் கையை பெற்றுள்ளன.
வெள்ள நேரத்தில் மக்களுக்கு பெரிதும் கைகொடுத்த அரசின் துறைகள், நிறுவனங்களின் விவரம் பின்வருமாறு:
தகவல் தொடர்புத்துறை:
வெள் ளத்தின்போது தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மக்களை கைவிட்டபோது, பிஎஸ்என்எல் நெட்வொர்க்கின் சேவை தடை யின்றி கிடைத்தது. நவம்பர் 30-ம் தேதியன்று மின் விநியோகம் நிறுத்தப்பட்டது முதல், டிசம்பர் 5-ம் தேதி வரை ஜெனரேட்டர்கள் மூலம் செல்போன் கோபுரங்களை இயக்குவதற்கு சுமார் ரூ.22 லட்சம் செலவிடப்பட்டது என்று பிஎஸ்என்எல் சென்னை தொலைத் தொடர்பு தலைமை பொது மேலாளர் எஸ்.எம்.கலாவதி கூறினார். இதே போல், தனியார் கூரியர் நிறுவனங் கள் மூடப்பட்டிருந்த நிலையில் 98 சதவீதம் அஞ்சல் நிலையங்கள் வெள்ளத்தின்போதும் இயங்கின.
போக்குவரத்துத்துறை:
வெள் ளத்தால் கால் டாக்ஸி, ஷேர் ஆட்டோ போன்றவற்றின் இயக்கம் முற்றிலும் முடங்கியது. அரை கி.மீ. தூரத்துக்கே, ஆட்டோக்காரர்கள் பலர் ரூ.500 கட்டணம் கேட்டனர். அப்போது, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் 70 சதவீதம் பஸ்கள் வெள்ளம் சூழ்ந்த சாலைகளில் இயக்கப்பட்டன. தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஜிஎஸ்டி சாலையில் வெள்ளம் ஏற்பட்ட போதிலும், உயிரை பணயம் வைத்து போக்குவரத்து ஊழியர்கள் பஸ்களை இயக்கினர்.
நெடுஞ்சாலைத்துறை:
இந்துஸ் தான் பெட்ரோலியம் நிறுவன ஆலை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது. தமிழகம் முழுவதற்கும் அங்கிருந்துதான் பெட்ரோல், காஸ் உள்ளிட்ட எரிபொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. அந்நிறுவனத்தையும் பிரதான சாலையையும் இணைக்கின்ற சாலையை வெள்ளம் துண்டிக்கவே, அதனை 36 மணி நேரத்தில் நெடுஞ் சாலைத்துறை ஊழியர்கள் சீர் செய்தனர். இதனால் கடந்த 6-ம் தேதி நள்ளிரவு முதல் 7-ம் தேதி காலை வரை 100 லாரிகளில் 380 விநியோக மையங்களுக்கு எரிபொருட்கள் கொண்டு செல்லப் பட்டதால் பெரும் தட்டுப்பாடு தவிர்க்கப்பட்டது.
ஆவின்:
வெள்ள நேரத்தில் பால் பாக்கெட்டுகளை வாங்குவது கூட கடினமானது. இதனால், தனியார் முகவர்கள் பலர், அரை லிட்டர் பால் பாக்கெட்டை ரூ.100-க்கு விற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது, தடையின்றி ஆவின் பால் கிடைக்க அரசுத் தரப்பில் உதவி எண்கள் வழங்கப்பட்டதோடு, நியாயமான விலைக்கே பால் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.
சுகாதாரத்துறை:
வெள்ள பாதிப் புகளில் கார்ப்பரேட் மருத்துவ மனைகளே சிக்கிக் கொண்ட நிலை யில், அரசு மருத்துவமனைகளில் சிறிதும் தொய்வின்றி பொது மக்களுக்கு சிகிச்சைகள் அளிக் கப்பட்டன. வெள்ளத்தால் பாதிக்கப் பட்டு தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் பலர் அரசு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர்.
வங்கித்துறை:
வெள்ளம் ஏற்பட்ட போது, தனியார் வங்கிகள் பல 2 நாட்களுக்கு விடுமுறை அறிவித் தன. ஆனால், வெள்ளத்தால் பாதிக்காத பொதுத்துறை வங்கி கிளைகள் பல வழக்கம்போல் இயங்கின.
தனியார் வங்கிகளில் சுய சேவை முனையங்கள் முடங் கிய நிலையில், பாரத ஸ்டேட் வங்கியின் சுயசேவை மையம் பொதுமக்களுக்கு பெரிதும் உதவியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT