Last Updated : 14 May, 2021 04:24 PM

 

Published : 14 May 2021 04:24 PM
Last Updated : 14 May 2021 04:24 PM

சிவப்பு அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி: புதுச்சேரிக்கு ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் வந்த 2,600 டன் அரிசி

புதுச்சேரிக்கு வந்த அரிசி மூட்டைகள்.

புதுச்சேரி

சிவப்பு அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி தர புதுச்சேரிக்கு ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் 2,600 டன் அரிசி வந்தது.

இந்தியாவில் தற்போது கரோனோ 2-வது கட்டப் பரவல் தீவிரமடைந்துள்ளது. இதனைத் தடுக்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டத் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா-III என்ற திட்டத்தின் மூலம், நபர் ஒருவருக்கு தலா 5 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, புதுச்சேரியில் சிவப்பு அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி விநியோகம் தொடங்கப்பட உள்ளது. முதல் கட்டமாக, 12 தொகுதிகளில் சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது.

இதன்படி, மத்திய அரசு தொகுப்பு மூலம் ஒடிசா மாநிலத்தில் இருந்து 42 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் மூலம் 2,600 டன் அரிசி சின்னபாபுசமுத்திரம் ரயில் நிலைய குட்ஷெட்டுக்கு இன்று (மே 14) வந்தன. அவை லாரிகள் மூலம் திருவண்டார் கோயிலில் உள்ள இந்திய உணவுக் கழக, உணவு தானிய சேமிப்புக் கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இப்பணி கிடங்கு மேலாளர் முத்துக்குமரன் மேற்பார்வையில் நடந்தது. இதனைத் தொடர்ந்து, அரிசி மூட்டைகள் புதுச்சேரி அரசு மூலம் எடுக்கப்பட்டு இலவசமாக வழங்கப்படும் என்று இந்திய உணவுக் கழக, புதுச்சேரி மேலாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

முன்னதாக, இந்திய உணவுக் கழக அதிகாரிகள் அரிசி மூட்டைகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x