Published : 13 May 2021 03:12 AM
Last Updated : 13 May 2021 03:12 AM

கரோனா தொற்று ஏற்படாமல் தடுக்க சித்த மருந்துகளை நாடும் பொதுமக்கள்

மயிலாடுதுறையில் உள்ள பெரியார் அரசு மருத்துவமனையில் உள்ள சித்த மருத்துவப் பிரிவில் மருந்துகளை வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்.

திருச்சி

கரோனா தொற்று 2-வது அலை தீவிரமடைந்து வரும் நிலையில், தொற்று ஏற்படாமல் தடுக்கவும், உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பொதுமக்கள் தற்போது அதிக அளவில் சித்த மருந்துகளை எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு அலோபதி மருந்துகளுடன் கபசுர குடிநீர், தாளிசாதி சூரணம் போன்ற சித்த மருந்துகளும் வழங்கப்படுகின்றன.

இந்தநிலையில், மாநிலம் முழுவதும் 12 இடங்களில் கரோனா சிகிச்சைக்கு இயற்கை முறை மருத்துவ மையங்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கரோனா சிகிச்சையில் சித்த மருத்துவத்தை உள்ளடக்கிய இயற்கை முறை மருத்துவத்துக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்து வத்தையே காட்டுகிறது என்கின் றனர் சித்த மருத்துவர்கள்.

இதுகுறித்து திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ்.காமராஜ் ‘இந்து தமிழ்’ நாளித ழிடம் கூறியது:

டெங்குக் காய்ச்சலுக்கு நிலவேம்பு குடிநீர் மிகச்சிறந்த நிவாரணமாக விளங்கியது. அதேபோல, தற்போது கரோனா வுக்கு சித்த மருந்துகள் மிகச்சிறந்த பலனை அளித்து வருகின்றன.

பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கவும், உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சுவாசப் பிரச்சி னையை தீர்க்கவும் தாளிசாதி சூரணம், அமுக்ரா சூரணம், நெல்லிக்காய் லேகியம், கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் சூரணங்கள், பிரமானந்த பைரவம் மாத்திரை உள்ளிட்ட பல்வேறு மருந்துகள் அரசு மருத்துவ மனைகளில் உள்ள சித்த மருத் துவப் பிரிவுகளில் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

இணை நோய் உள்ளவர்கள் உட்கொண்டு வரும் அலோபதி மருந்துகளுடன் இந்த மருந்து களையும் சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று சேர்த்து உட்கொள்ளலாம். இந்த மருந்து கள் நல்ல பலனையும் தருகின்றன.

தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து திருச்சியில் ஓரிருநாளில் 150 படுக்கைகளுடன் கூடிய கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப்படும். இங்கு நோயாளிகளுக்கு இருவேளை கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர், வேது பிடித்தல் மற்றும் இதர சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றுக்கு தேவையான சித்த மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x