Published : 11 May 2021 11:22 AM
Last Updated : 11 May 2021 11:22 AM

தொகுதி மக்களை கரோனாவிலிருந்து காப்பாற்றுக: பதவியேற்ற எம்எல்ஏக்களுக்கு கமல் வலியுறுத்தல்

கமல்: கோப்புப்படம்

சென்னை

தொகுதி மக்களை கரோனாவிலிருந்து காப்பதை முழுமுதற் கடமையாகக் கருதி எம்எல்ஏக்கள் செயலாற்ற வேண்டும் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மே 07 அன்று பதவியேற்றுக்கொண்டார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்நிலையில், தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், சட்டப்பேரவைக் கூட்டம் சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று (மே 11) கூடியது. அப்போது, தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, பாமகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 234 எம்எல்ஏக்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

இது தொடர்பாக, கமல் இன்று (மே 11) தன் ட்விட்டர் பக்கத்தில், "இன்று சட்டப்பேரவை உறுப்பினர்களாகப் பதவி ஏற்றுக் கொள்ளும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரவர் தொகுதி மக்களை கரோனாவிலிருந்து காப்பதை முழுமுதற் கடமையாகக் கருதி செயலாற்றும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x