Last Updated : 10 May, 2021 07:22 PM

2  

Published : 10 May 2021 07:22 PM
Last Updated : 10 May 2021 07:22 PM

ஊரடங்கு முழுவதும் அம்மா உணவகம் மூலம் 3 வேளை இலவச உணவு: திமுக எம்எல்ஏ சொந்தச் செலவில் ஏற்பாடு

கும்பகோணம் அம்மா உணவகத்தில் ஊரடங்கு காலம் முழுவதும் இலவசமாக உணவு வழங்க ஏற்பாடு செய்த எம்எல்ஏ க.அன்பழகன் மூதாட்டிகளுக்கு உணவு வழங்கினார். 

கும்பகோணம்

ஊரடங்கு காலம் முழுவதும், தமிழக அரசின் அம்மா உணவகத்தின் மூலம் தனது சொந்தச் செலவில் உணவு வழங்கும் பணியை இன்று (10-ம் தேதி) கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினர் தொடங்கி வைத்தார்.

கும்பகோணம் நகராட்சி சார்பில் தஞ்சாவூர் சாலையில் அம்மா உணவகம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு காலையில் சிற்றுண்டியும், மதியம் தயிர், சாம்பார், எலுமிச்சை, புளி சாதம் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஊரடங்கின்போது பொதுமக்கள் இலவசமாக உணவு உட்கொள்ளும் விதமாக காலை, இரவு சிற்றுண்டியும், மதியம் இரண்டு வகை உணவு, கூட்டு, பொரியலுடன் இலவசமாக வழங்க முடிவெடுத்த எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், உணவு தயாரிக்கத் தேவையான தொகையை நகராட்சியிடம் செலுத்தியுள்ளார்.

அதன்படி இன்று மதியம் அம்மா உணவகத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் நிகழ்வினை எம்எல்ஏ தொடங்கி வைத்தார். நிகழ்வில் கும்பகோணம் நகர திமுக செயலாளர் சு.ப.தமிழழகன், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் டி.ஆர்.லோகநாதன், சின்னை பாண்டியன், செந்தில், செல்வம், கும்பகோணம் நகராட்சி ஆணையர் லெட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஊரடங்கு காலம் முழுவதும் அம்மா உணவகம் மூலம் 3 வேளை இலவச உணவு வழங்கச் சொந்தச் செலவில் ஏற்பாடு செய்த திமுக எம்எல்ஏவை அனைத்துத் தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x