Published : 10 May 2021 01:13 PM
Last Updated : 10 May 2021 01:13 PM

கரோனா 2-வது அலை: நிவாரண உதவிக்கு சன் டிவி ரூ.30 கோடி நிதி

கோவிட்-19 தொற்றின் இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல உதவிகள் செய்ய சன் டிவி நிறுவனம் ரூ.30 கோடி நிதியை அளித்துள்ளது.

நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை உலுக்கி வருகிறது, நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர், ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர். இந்தியாவுக்குப் பல உலக நாடுகளும் ஆதரவுக் கரம் நீட்டி வருகின்றன. உள்நாட்டைச் சேர்ந்த தனி நபர்களும் நிறுவனங்களும் கூட உதவி செய்யக் களம் இறங்கியுள்ளனர்.

தற்போது சன் டிவி நிறுவனம் ரூ.30 கோடியை, கோவிட்-19 இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல உதவிகளுக்கு நிதியாக வழங்கியுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி அறிக்கையில், "இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடந்து வரும் முன்னெடுப்புகளுக்கு இந்தப் பணம் செலவிடப்படும்.

இந்திய அரசும், மாநில அரசுகளும் ஆரம்பித்திருக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கும், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், மருந்துகள் உள்ளிட்ட விஷயங்களைத் தரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்தும் இந்தப் பணம் செலவிடப்பட்டும்.

இது தவிர எங்களின் அத்தனை ஊடகங்களின் மூலமாகவும், இந்தியா மற்றும் உலகம் முழுக்க இருக்கும் பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x