Published : 15 Jun 2014 12:00 AM
Last Updated : 15 Jun 2014 12:00 AM
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியல் சென்னை கீழ் பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) அலுவல கத்தில் சனிக்கிழமை வெளியிடப் பட்டது. 132 மாணவ, மாணவிகள் 200-க்கு 200 கட்ஆஃப் எடுத்துள் ளனர்.
தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத் தம் 2,555 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் 15 சதவீதம் (383 இடங்கள்) அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, எஞ்சியுள்ள 85 சதவீதம் (2,172 இடங்கள்) மாநில அரசுக்கு உள்ளது. சென்னை தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் 15 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, எஞ்சியுள்ள 85 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளது.
இதேபோல 12 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 993 எம்பிபிஎஸ் இடங்கள், 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து சுமார் 900 இடங்கள் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகிறது.
27,539 விண்ணப்பங்கள் ஏற்பு
2014-15ம் கல்வி ஆண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த மாதம் 14-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடந்தது. மொத்தம் 30,380 விண்ணப்பங்கள் விற்பனை யாயின. பூர்த்தி செய்யப்பட்ட 28,053 விண்ணப்பங்கள் சமர்ப் பிக்கப்பட்டன. இவற்றில் 10,105 மாணவர்கள், 17,434 மாணவிகள் என மொத்தம் 27,539 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் பிரிவில் யாரும் விண்ணப்பிக்கவில்லை. மாற்றுத் திறனாளிகள் (3 சதவீதம் ஒதுக்கீடு) 79 பேரும், விளையாட்டு வீரர்கள் (3 இடங்கள்) 380 பேரும், ராணுவ வீரர்களின் பிள்ளைகள் (எம்பிபிஎஸ் 2 இடம், பிடிஎஸ் 1 இடம்) 454 பேரும் விண்ணப்பித்தனர்.
அமைச்சர் வெளியிட்டார்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு மாணவர் சேர்க்கை கவுன்சலிங் குக்கு மாணவ, மாணவிகளை வரிசைப்படி அழைப்பதற்கு வசதியாக சுழற்சி முறையில் ரேண்டம் எண் கடந்த 9-ம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தரவரிசை பட்டியல் சென்னை கீழ்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) அலுவலகத்தில் சனிக்கிழமை வெளியிடப்பட்டது. தரவரிசை பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டார்.
இதுதொடர்பாக நிருபர்களிடம் மருத்துவக் கல்வி இயக்குநர் கீதாலட்சுமி, மாணவர் தேர்வுக் குழு செயலாளர் சுகுமார் கூறிய தாவது:
இணையதளத்தில் கட்ஆஃப் விவரம்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக் கான தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் 132 மாணவ, மாணவிகள் 200-க்கு 200 கட்ஆஃப் எடுத்துள்ளனர். இதன் விவரம் www.tnhealth.org மற்றும் www.tn.gov.in இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
சிறப்பு பிரிவினருக்கான கவுன்சலிங் கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி வளாக அரங்கத்தில் 17-ம் தேதி தொடங்குகிறது. பொது பிரிவினருக்கான கவுன்சலிங் 18-ம் தேதி தொடங்குகிறது. தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கல்லூரியில் சேர்க்கைக்கான ஆணையை சுகாதாரத் துறை அமைச்சர் அன்றைய தினம் வழங்குவார். முதல்கட்ட கவுன்சலிங் 22-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும்.
அழைப்புக் கடிதம் வராவிட்டால்..
கவுன்சலிங் முதல் நாளில் 600 மாணவ, மாணவிகள் அழைக்கப் படுவார்கள். அதற்கு அடுத்த நாட்களில் நாள் ஒன்றுக்கு 900 பேர் அழைக்கப்பட உள்ள னர். கவுன்சலிங்கில் கலந்துகொள் வதற்கான அழைப்புக் கடிதத்தை மாணவ, மாணவிகளுக்கு தபால் மூலம் அனுப்பும் பணி தொடங்கி விட்டது. அவர்களது செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியும் (எஸ்எம்எஸ்) அனுப்பப்படும். கவுன்சலிங்கில் பங்கேற்க உள்ள மாணவர்களின் விவரம் இணைய தளத்தில் வெளியிடப்படும். அழைப்புக் கடிதம் கிடைக்காத வர்கள் எஸ்எம்எஸ் அல்லது இணையதளத்தை பார்த்து தங்க ளுக்கான நாளில் நேரடியாக கவுன்சலிங்கில் கலந்துகொள் ளலாம்.
செப்டம்பரில் வகுப்புகள்
கவுன்சலிங்கில் பங்கேற் பவர்கள் பரிசீலனை கட்டணமாக ரூ.500 கட்ட வேண்டும். கவுன்சலிங் குக்கு ஒரு மணி நேரம் முன்னதாக வந்துவிட வேண்டும். தினமும் கவுன்சலிங் முடிந்த பிறகு, அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் காலி இடங்கள் குறித்த விவரங் கள் இணையதளத்தில் வெளியிடப் படும்.
வழக்கமாக மருத்துவக் கல்லூரிகளில் வகுப்புகள் ஆகஸ்ட்டில் தொடங்கும். இந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி மருத்துவக் கல்லூரி வகுப்புகள் தொடங்க உள்ளன.
முதல் 10 மாணவ, மாணவிகள்
தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் விவரம்:
கே.சுந்தர் நடேஷ் (கோபாலபுரம், சென்னை), எஸ்.அபிஷேக் (ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி), வி.எஸ்.விஜயராம் (தண்டல், ஈரோடு), எம்.மிதுன் (போதுப்பட்டி, நாமக்கல்), ஈ.ஸ்ருதி (போதுப்பட்டி நாமக்கல்), கே.நிவேதா (போதுப்பட்டி நாமக்கல்), கே.ஆர்.மைதிலி (அந்தியூர், ஈரோடு), ஈ.கரோலின் திவ்யா (போதுப்பட்டி, நாமக்கல்), வி.கவுதம் (போதுப்பட்டி, நாமக்கல்), எம்.மைவிழி ஸ்ருதி (ராசிபுரம், நாமக்கல்).
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT