Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களில் தொடர் சாதனை படைக்கும் திண்டுக்கல் மாவட்ட திமுக

திண்டுக்கல்

தமிழகத்தில் நடந்த தேர்தல் களில், திண்டுக்கல் மாவட்ட திமுக தொடர்ந்து பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில், அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி வெற்றி பெற்ற நிலையில், ஒட்டன்சத்திரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அர.சக்கரபாணி, தமிழகத்திலேயே இரண்டாவதாக 64,926 வாக்குகள் வித்தியா சத்தில் வெற்றிபெற்று சாதனை படைத்தார்.

கட்சித் தலைவர்களே அவ்வப்போது தொகுதி மாறி போட்டியிடும் நிலையில், ஒரே தொகுதியில் தொடர்ந்து தோல்வியே காணாமல் ஆறு முறை தேர்வு செய்யப்பட்டு கால் நூற்றாண்டுக்கும்மேலாக எம்.எல்.ஏ.வாக இருந்து சாதனை படைத்து வருகிறார். (தற்போதைய பதவிக் காலத்தை நிறைவு செய்தால் ஒரே தொகுதியில் மொத்தம் 30 ஆண்டுகள் எம்.எல்.ஏ.)

கடந்த மக்களவைத் தேர்தலில், திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ப.வேலுச்சாமி போட்டியிட்டார். இவர் தமிழகத்திலேயே அதிகமாக ஐந்துலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாதனை படைத்தார். இதையடுத்து தற்போது நடந்த தேர்தலில் திமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, ஆத்தூர் தொகுதியில் பதிவான வாக்குகளில் 72.12 சதவீத வாக்குகளைப் பெற்று, ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 151 வாக்குகள் வித்தியாசத்தில் தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவரை யாரும் படைத்திராத மெகா சாதனையை படைத்தார்.

மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல் என தமிழக அளவில் திண்டுக்கல் மாவட்ட திமுக தொடர்ந்து முறியடிக்க முடி யாத பல சாதனைகளை படைத்து வருகிறது. இதற்கு கட்சியின் கட்டுக்கோப்பும், மற்ற மாவட்டங்களை போல் திமுகவினருக்குள் கோஷ்டிப் பூசல் இல்லாததும், மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ளதுமே காரணம்.

திண்டுக்கல் மாவட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்களை கட்டுக்கோப்பாக நடத்திச் செல்வதிலும், மக்கள் செல்வாக்கைப் பெறுவதிலும் திமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி முக்கியக் காரணமாக உள்ளார்.

தொடர்ந்து ஆறு முறை வெற்றிபெற்று கால் நூற்றாண்டுக்கும் மேலாக எம்.எல்.ஏ.வாக இருந்து சாதனை படைத்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x