Published : 04 May 2021 01:50 PM
Last Updated : 04 May 2021 01:50 PM

கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்; இயல்புக்கு மாறாக வியர்க்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாகும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் இன்று (மே 04) வெளியிட்ட அறிவிப்பு:

"விதர்பா முதல் கேரளா வரை 1 கி.மீ. உயரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காணமாக

04.05.2021: மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

05.05.2021: மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ஈரோடு, திருப்பூர், தருமபுரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

06.05.2021: மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், ஈரோடு, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

07.05.2021: மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

08.06.2021: மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால், காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும். இதன் காரணமாக, மாலை முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

காற்றில் ஒப்பு ஈரப்பதன் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதன் காரணமாக மாலை முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும்.

கடந்த 24 மணிநேரத்தில் மழை அளவு (சென்டி மீட்டரில்):

கொடுமுடி (ஈரோடு), உத்தமபாளையம் (தேனி) தலா 5, போடிநாயக்கனூர் (தேனி), எருமைப்பட்டி (நாமக்கல்), திருவாடானை (ராமநாதபுரம்), பெரியார், கயத்தாறு (தூத்துக்குடி) தலா 4, ராதாபுரம் (திருநெல்வேலி), திருபுவனம் (சிவகங்கை), பர்லியாறு (நீலகிரி) தலா 3, குளச்சல் (கன்னியாகுமரி), வாடிப்பட்டி (மதுரை) தலா 2, புதுக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), சோலார் (கோவை) தலா 1 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள, கர்நாடக கடற்பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்".

இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x