Published : 04 May 2021 10:53 AM
Last Updated : 04 May 2021 10:53 AM

முன்னாள் டிஜிபியின் கார் ஓட்டுநர், நீதிபதியின் பாதுகாப்பு அதிகாரி கரோனா தொற்றால் உயிரிழப்பு

சென்னை

சென்னையில் கரோனா தொற்றால் 2 காவலர்கள் மரணமடைந்துள்ளனர். அவர்களில் உளவுத்துறை உதவி ஆய்வாளர், முன்னாள் டிஜிபியின் கார் ஓட்டுனரான தலைமைக் காவலரும் உயிரிழந்துள்ளார்.

சென்னையில் கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஊரடங்கு உள்ளிட்ட பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் முன்களப்பணியாளர்களான போலீஸார் தொடர்ந்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சென்னையில் சுமார் 400 க்கும் மேற்பட்ட போலீஸார், அதிகாரிகள் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் சுமார் 20 பேர் வரை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர்.

இன்றும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 2 போலீஸார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் உளவுத்துறை உதவி ஆய்வாளர், ஒருவர் ஆயுதப்படை தலைமைக் காவலர். இவர் தீயணைப்புத்துறை முன்னாள் டிஜிபியின் கார் ஓட்டுநர் ஆவார். இவர் 1999 ஆம் ஆண்டு காவல்துறையில் இணைந்த இவர் தலைமைக்காவலராக இருந்தார். சென்னை புழல் பகுதியில் வசித்து வந்தார். இவருக்கு கோட்டீஸ்வரி என்கிற மனைவியும், 7 வயதிலும், 5 வயதிலும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

கரோனா நோய் தொற்று காரணமாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆயுதப்படை தலைமை காவலர் கமலநாதன்(44) கரோனா நோய் தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் 25 -ம் தேதி 05.00 மணிக்கு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மே 4 நள்ளிரவு 01.30 மணியளவில் காலமானார்.

இதேப்போன்று கரோனா நோய்த்தொற்று காரணமாக (SBCID) உளவுத்துறை உதவி ஆய்வாளர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். ஆவடி காவலர் குடியிருப்பில் வசித்து வந்த உதவி ஆய்வாளர் சின்னகண்ணு (55) கரோனா நோய்த்தொற்று அறிகுறியுடன் கடந்த ஏப்ரல் 28 ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு மருத்துவமனையில் எடுத்த பரிசோதனையில் மே 2 அன்று கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று நேற்று மாலை காலமானார் . அவரது உடல் சொந்த ஊரான வேலூர் மாவட்டம் சேனூருக்கு கொண்டு செல்லவுள்ளதாக தெரிய வருகிறது.

உயிரிழந்த உதவி ஆய்வாளர் சின்னக்கண்ணு உயர்நீதிமன்ற நீதிபதிக்கு கடந்த ஆறு வருடங்களாக பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் 1993 ஆம் ஆண்டு காவல்துறையில் இணைந்து படிப்படியாக பதவி உயர்வு பெற்று உதவி ஆய்வாளராக பணியில் இருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x