Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM
25 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக-திமுக நேரடியாக மோதிய தொண்டாமுத்தூரில் எஸ்.பி.வேலுமணி ‘ஹாட்ரிக்' வெற்றிபெற்றுள்ளார்.
கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் கடைசியாக 1996-ம்ஆண்டு திமுக, அதிமுக வேட்பாளர்கள் நேரடியாக போட்டியிட்டனர். அப்போது திமுக சார்பில் போட்டி யிட்ட சி.ஆர்.ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். அதன்பிறகு, தமிழ் மாநிலகாங்கிரஸ் (மூப்பனார்), மதிமுகவேட்பாளர்களும், 2009 இடைத்தேர் தலில் காங்கிரஸ் வேட்பாளரும் வெற்றிபெற்றனர். 2011, 2016-ம்ஆண்டு என தொடர்ந்து 2 முறை அதிமுக வேட்பாளர் எஸ்.பி. வேலுமணி இங்கு வெற்றிபெற்றார். 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முறைதான் திமுக, அதிமுக வேட்பாளர்கள் நேரடியாக களம் கண்டனர். பலஆண்டுகளுக்குப் பிறகு கூட்டணிக்கு தொகுதியை ஒதுக்காமல் நேரடியாக களம் கண்டதாலும், திமுக தலைமை தொகுதியில் தனி கவனம் செலுத்தியதாலும் தமிழ கத்தில் கவனிக்கப்பட்ட முக்கிய தொகுதிகளில் ஒன்றாக மாறியது தொண்டாமுத்தூர்.
திமுக சார்பில் கட்சியின் சுற்றுச் சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, காங்க யம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். தொண்டா முத்தூரில் போட்டியாளர் வலுவாகஇருக்க வேண்டும் என்பதால், அவரை களமிறக்கியது திமுக. ‘கார்த்திகேய சிவ சேனாபதிவெளியூர்காரர்’ என்பதை வைத்துஅதிமுகவினர் பிரச்சாரம் செய்தனர். எஸ்.பி.வேலுமணி மீதானகுற்றச்சாட்டுகளை முன்வைத்து கார்த்திகேய சிவசேனாபதி பிரச்சாரம் செய்தார். இருதரப்பின ரும் போட்டிபோட்டு பிரச்சாரத்தில் தீவிரம் காட்டினர்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் தேர்தல் முடிவுகள் வெளியாகின. எஸ்.பி.வேலுமணி 1,24,225 வாக்குகளும், கார்த்திகேய சிவசேனாபதி 82,595 வாக்குகளும் பெற்றனர்.41,630 வாக்குகள் வித்தியாசத் தில் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக (ஹாட்ரிக்) தொகுதியை தக்கவைத்துக் கொண்டார் எஸ்.பி.வேலுமணி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT