Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM
விருதுநகர் மாவட்டத்தில் மொத் தம் உள்ள 7 தொகுதிகளில் 4 தொகுதிகளில் திமுகவும் 2 தொகுதிகளில் அதன் கூட்டணிக் கட்சிகளும் வெற்றிபெற்றுள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சாத்தூர், சிவகாசி, வில்லிபுத்தூர், ராஜபாளையம் என 7 தொகுதிகள் உள்ளன. இதில், 2016 தேர்தலில் திருச்சுழியில் திமுகவைச் சேர்ந்த தங்கம்தென்னரசும், அருப்புக்கோட்டையில் சாத்தூர் ராமச்சந்திரனும், விருதுநகர் தொகுதியில் திமுகவைச் சேர்ந்த சீனிவாசனும், ராஜபாளையம் தொகுதியில் திமுகவைச் சேர்ந்த தங்கப்பாண்டியனும் வெற்றி பெற்றனர். சிவகாசியில் கே.டி.ராஜேந்திரபாலாஜியும், வில்லிபுத்தூரில் அதிமுகவைச் சேர்ந்த சந்திர பிரபாவும் வெற்றி பெற்றனர். 2019 நடைபெற்ற இடைத் தேர்தலில் சாத்தூரில் அதிமுகவைச் சேர்ந்த ராஜவர்மன் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், தற்போது நடந்த தேர்தலில் தற்போதைய திமுக எம்.எல்.ஏ.க்கள் நால்வரும், அந்தந்த தொகுதிகளில் மீண்டும் களம் இறங்கினர்.
சாத்தூர் தொகுதி திமுக கூட்டணியான மதிமுகவுக்கும், வில்லிபுத்தூர் காங்கிரஸ் கட் சிக்கும் ஒதுக்கப்பட்டது. இதில், திருச்சுழியில் திமுக வேட்பாளர் தங்கம்தென்னரசு 3-வது முறையாக வெற்றி பெற்றார்.
மேலும், 1,02,225 வாக்குகள் பெற்றுள்ளதும், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக கூட்டணியில் உள்ள மூவேந்தர் முன்னணிக் கழக வேட்பாளர் ராஜசேகரனைவிட 60,992 வாக்குகள் பெற்று அதிக வாக்கு வித்தியாசத்தியில் வெற்றி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அருப்புக்கோட்டையில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், திமுக சார்பில் சாத்தூர் ராமச் சந்திரனும் போட்டியிட்டனர்.
இதில், ஏற்கனவே அமைச்சராக இருந்த வைகைச்செல்வன் மீது மக்களுக்கு இருந்த செல் வாக்கு குறைந்ததாலும், தற் போதைய எம்.எல்.ஏ.வான சாத்தூர் ராமச்சந்திரனுக்கு பொதுமக்கள் மத்தியிலும் சமூதாயத்தினர் மத்தியிலும் செல்வாக்கு உயர்ந் திருந்தது.
வைகைச்செல்வன் தொகுதியில் இருக்கமாட்டார் என்பதும், சாத்தூர் ராமச்சந்திரன் தொகுதிக்குள் எப்போதும் இருப் பார் என்பதும் அவருக்கு கூடுதல் பலமாக இருந்தது.
இதனால், வைகை ச்செல்வன் 52,006 வாக்குகள் பெற்ற நிலை யில், 91,040 வாக்குகள் பெற்று சாத்தூர் ராமச்சந்திரன் வெற்றி பெற்றுள்ளார்.
விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் பாண்டுரங்கனும், திமுக சார்பில் தற்போதைய எம்.ஏல்.ஏ. சீனிவாசனும் போட்டி யிட்டனர். இதில், கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு வாய்ப்பு கொடுக் கப்பட்டதால் அதிமுகவின் பலம் குறைந்தது. மேலும், திமுக வேட்பாளராக மீண்டும் களம் இறக்கப்பட்ட சீனி வாசன் மீது புகார் இல்லாதது கூடுதல் பலத்தைக் கொடுத்தது. இதனால், 51,422 வாக்குகள் பெற்ற பாஜக வேட்பாளர் பாண்டுரங்கனை பின்னுக்குத் தள்ளி 71,820 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் சீனிவாசன் வெற்றிபெற்றார்.
சாத்தூரில் அதிமுக உட்கட்சிப் பூசல் இருந்த நிலையில், மாவட்டச்செயலர் ரவிச்சந்திரன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
அவருக்கு எதிராக திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளர் ரகுராமன் போட்டியிட்டார். ஏற் கெனவே 2016-ல் சாத்தூரில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இம்முறை 74,174 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
சிவகாசியில் அதிமுக வேட் பாளர் லட்சுமி கணேசனும், காங் கிரஸ் வேட்பாளர் அசோகனும் தொடக்கத்திலிருந்தே குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இருந்து வந்தனர். பாதி சுற்று முடிந்த நிலையில் அதிமுக வேட்பாளர் லட்சுமிகணேசன் முன்னிலை பெற்றிருந்தார். ஆனால், அதன் பின் அடுத்தடுத்த சுற்றுகளில் பின்னுக்குத் தள்ளப்பட்டார். ஆனாலும், அதிமுக வேட்பாளர் லட்சுமி கணேசன் 61,628 வாக்குள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் அசோகன் 78,947 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். சிவகாசியில் அதிமுகவுக்கான வாக்குவங்கி குறைந்ததால் தொகுதி மாறி அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி போட்டியிட் டதும் குறிப்பிடத்தக்கது.
வில்லிபுத்தூரில் அதிமுக சார்பில் மான்ராஜ் வெற்றி பெற்றார். இதில் 70,475 வாக்குகள் பெற்றார். மறைந்த காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் 57,737 வாக்குகள் பெற்றார்.
ராஜபாளையத்தில் கே.டி. ராஜேந்திரபாலாஜி போட்டியிட் டதால் விஐபி தொகுதியானது. கட்சி மற்றும் சமுதாய வாக்குகளை குறிவைத்து களமிறங்கிய ராஜேந்திரபாலாஜியால் திமுக எம்எல்ஏ தங்கபாண்டியனுக்கு இருந்த செல்வாக்கை சமாளிக்க முடியவில்லை. இதனால் அவர் வெற்றிவாய்ப்பை இழந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT