Published : 03 May 2021 03:16 PM
Last Updated : 03 May 2021 03:16 PM
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. முதல்வராக என்.ரங்கசாமி பொறுப்பேற்கிறார்.
புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. இதில் 81.70 சதவீத வாக்குகள் பதிவாகின. புதுச்சேரி மாநிலம் முழுவதும் 6 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடந்தது. முடிவுகள் 3 கட்டங்களாக அறிவிக்கப்பட்டன.
அதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிட்ட என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 6 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணியில் போட்டியிட்ட அதிமுக 5 இடங்களிலும் தோல்வியைத் தழுவியிருக்கிறது.
எதிரணியில் 14 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 2 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான திமுக 6 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறது. ஒரு தொகுதியில் போட்டியிட்ட விசிக மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் தோல்வியைத் தழுவியிருக்கின்றன.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம்:
வேட்பாளர்கள் - தொகுதி - பெற்ற வாக்குகள்
என்.ஆர்.காங்கிரஸ்
1. தேனி ஜெயக்குமார் - மங்கலம்- (16,972 வாக்குகள்)
2. கே.எஸ்.பி. ரமேஷ் - கதிர்காமம்- (17,775 வாக்குகள்)
3. லட்சுமிகாந்தன் - ஏம்பலம் - (15,624 வாக்குகள்)
4. ராஜவேலு - நெட்டப்பாக்கம்- (15,978 வாக்குகள்)
5. தட்சிணாமூர்த்தி (எ) பாஸ்கர் - அரியாங்குப்பம்- (17,858 வாக்குகள்)
6. ஏ.கே.டிஆறுமுகம் - இந்திரா நகர்- (21,841 வாக்குகள்)
7. ரங்கசாமி - தட்டாஞ்சாவடி- (12,978 வாக்குகள்)
8. சந்திரபிரியங்கா - நெடுங்காடு- (10,774 வாக்குகள்)
9. பி.ஆர்.என்.திருமுருகன் - காரைக்கால் வடக்கு- (12,704 வாக்குகள்)
10. லட்சுமி நாராயணன் - ராஜ்பவன்- (10,096 வாக்குகள்)
பாஜக
1. ஜான்குமார் - காமராஜ் நகர்- (16,687 வாக்குகள்)
2. ரிச்சர்ட் ஜான்குமார் - நெல்லித்தோப்பு- (11,757 வாக்குகள்)
3. நமச்சிவாயம் - மண்ணாடிப்பட்டு- (14,939 வாக்குகள்)
4. கல்யாணசுந்தரம் - காலாப்பட்டு- (13,227 வாக்குகள்)
5. ஏம்பலம் செல்வம் - மணவெளி- (17,225 வாக்குகள்)
6. சாய் ஜெ.சரவணன் - ஊசுடு- (14,121 வாக்குகள்)
காங்கிரஸ்
1. வைத்தியநாதன் - லாஸ்பேட்டை-(14,592 வாக்குகள்)
2. ரமேஷ் பரம்பத் - மாஹே-(97,44 வாக்குகள்)
திமுக
1. அனிபால் கென்னடி - உப்பளம்- (13,433 வாக்குகள்)
2. சிவா - வில்லியனூர்- (19,653 வாக்குகள்)
3. நாஜிம் - காரைக்கால் தெற்கு- (17,401 வாக்குகள்)
4. சம்பத் - முதலியார் பேட்டை- (15,151 வாக்குகள்)
5. நாக தியாகராஜன் - நிரவி பட்டினம்- (14,496 வாக்குகள்)
6. செந்தில் - பாகூர்- (11,789 வாக்குகள்)
சுயேச்சை வெற்றியாளர்கள்
1. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அஷோக் - ஏனாம்- (17,132 வாக்குகள்)
2. நேரு - உருளையன்பேட்டை - (9,580 வாக்குகள்)
3. பிரகாஷ் குமார் - முத்தியால்பேட்டை- (8,778 வாக்குகள்)
4. அங்காளன் - திருபுவனை- (10,597 வாக்குகள்)
5. சிவா - திருநள்ளாறு- (9,796 வாக்குகள்)
6. சிவசங்கரன் - உழவர்கரை- (11,940 வாக்குகள்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT