Published : 02 May 2021 05:06 PM
Last Updated : 02 May 2021 05:06 PM

பாஜக டெல்லி தலைமையிடமிருந்து ஸ்டாலினுக்கு முதல் வாழ்த்து: ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் ட்வீட்

சென்னை

சட்டப்பேரவைத் தேர்தலில் பெரிய அளவில் வெற்றியைப் பெறுவதன் மூலம் திமுக ஆட்சியில் அமர்கிறது. முதல்வர் பதவியில் அமரும் ஸ்டாலினுக்கு பாஜக தலையிடமிருந்து முதல் வாழ்த்தாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் ட்வீட் செய்துள்ளனர்.

திமுக தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக, மமக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலைச் சந்தித்தன. கடும் போட்டி நிலவிய இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி பெரிய வெற்றியைப் பெற்று முன்னிலை வகிக்கிறது. அறுதிப் பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களைக் கடந்து திமுக மட்டுமே 128 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதால் எளிதில் திமுக ஆட்சி அமைக்கிறது.

இதன் மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆகிறார். அவருக்கு வாழ்த்துகள் குவிகின்றன. டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், மம்தா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் எதிர் முகாமிலிருந்து அதுவும் பாஜக டெல்லி தலைமையிடமிருந்து முதல் வாழ்த்து வந்துள்ளது. பாஜக மூத்த தலைவர், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முதல்வராகப் பதவி ஏற்கவுள்ள ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “Congratulations to DMK leader, Thiru @mkstalin on his party’s victory in Tamil Nadu assembly elections. I extend my best wishes to him.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு திமுக தலைவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதேபோன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “Good wishes and congratulations @mkstalin on your success in the Assembly election in Tamil Nadu. Wishing you and @arivalayam a good tenure in the service of the people.

ஸ்டாலினுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x