Published : 02 May 2021 04:49 PM
Last Updated : 02 May 2021 04:49 PM
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குகள் எண்ணிக்கையில் 10 சுற்றுகள் முடிந்த நிலையில், நோட்டாவை விடக் குறைவான வாக்குகளையே ஜெயங்கொண்டம் அமமுக வேட்பாளர் கொ.சிவா பெற்றுள்ளார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக, தேமுதிகவுடன் கைகோத்து தேர்தலைச் சந்தித்தது. தேமுதிகவுக்கு அனைத்துத் தொகுதிகளிலும் கணிசமான வாக்கு வங்கி உள்ளது என அக்கட்சி தொடர்ந்து கூறிவரும் நிலையில், தற்போது அமமுகவுடன் கூட்டணி வைத்தும், நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சிகளின் வாக்குகளைக் கூடப் பெற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
அரியலூர் தொகுதியில் 10 சுற்றுகள் எண்ணி முடிந்த நிலையில் 4-வது இடத்தில் அமமுக வேட்பாளர் துரை.மணிவேல் இருந்து வருகிறார். இதுவரை அவர் பெற்ற வாக்குகள் 3 இலக்கத்திலேயே உள்ளன. நோட்டாவை விட சொற்ப வாக்குகளே கூடுதலாகப் பெற்றுள்ளார். இவர், 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் அரியலூர் தொகுதி வேட்பாளராக நின்று வெற்றி பெற்று எம்எல்ஏவாகப் பதவி வகித்தார் என்பது குறிப்பிட தக்கது.
10 சுற்றுகள் வரை வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்
மதிமுக (திமுக) வேட்பாளர் கு.சின்னப்பா - 38,460,
அதிமுக தாமரை ராஜேந்திரன் - 33,159,
அமமுக துரை. மணிவேல் - 565,
நாதக சுகுணாகுமார் - 3,978,
ஐஜேகே பி.ஜவகர் - 484,
நோட்டா - 484.
அதேபோல், ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் சிவா, நோட்டாவை விடக் குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளார்.
10 சுற்றுகள் வரை வேட்பாளர்கள் பெற்றுள்ள வாக்கு விவரம்
திமுக க.கண்ணன் - 34,347,
பாமக கே.பாலு - 33,320,
நாதக நீல.மகாலிங்கம் - 3,960,
ஐஜேகே குரு.சொர்ணலதா - 1,955,
நோட்டா - 695
அமமுக கொ.சிவா - 543,
தனித்து நின்று களம் காணும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் கூட 10 சுற்றுகள் முடிவில் 3,000 வாக்குகளைத் தாண்டிய நிலையில், தேமுதிகவுடன் இணைந்து களம் கண்ட அமமுக, 10 சுற்றுகளில் 1,000 வாக்குகளைக் கூறப் பெற முடியவில்லை என்பது அக்கட்சியினர் மீது மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை என்பதையே காட்டுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT