Published : 02 May 2021 03:55 PM
Last Updated : 02 May 2021 03:55 PM
கீழ்வேளூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் நாகை மாலி 16 ஆயிரத்து 985 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டப்பேரவைத் தொகுதியில், திமுக கூட்டணிக் கட்சி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக, முன்னாள் எம்எல்ஏ நாகை மாலி போட்டியிட்டார். இந்தத் தொகுதியில் 1 லட்சத்து 78 ஆயிரத்து 686 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 1 லட்சத்து 41 ஆயிரத்து 928 வாக்குகள் பதிவாகின.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நாகை மாலி முதல் சுற்றில் இருந்தே முன்னிலையில் இருந்து வந்தார். 18-வது சுற்று முடிவில் 67 ஆயிரத்து 288 வாக்குகள் பெற்றார். தபால் வாக்குகள் 700 பெற்றார். இதையடுத்து அவர் மொத்தமாக 67 ஆயிரத்து 988 வாக்குகள் பெற்றார்.
அதிமுக கூட்டணிக் கட்சி சார்பில் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன் போட்டியிட்டார். இவர் இறுதிச்சுற்று முடிவில் 50 ஆயிரத்து 754 வாக்குகளைப் பெற்றார். தபால் ஓட்டு 249 பெற்று 51 ஆயிரத்து 3 வாக்குகளைப் பெற்றார்.
இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நாகை மாலி, பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனைவிட, 16 ஆயிரத்து 985 வாக்குகள் அதிகமாகப் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு மாவட்டத் தேர்தல் அலுவலரும், நாகை மாவட்ட ஆட்சியருமான பிரவீன் பி.நாயர் சான்றிதழ் வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT