Published : 02 May 2021 01:03 PM
Last Updated : 02 May 2021 01:03 PM
திருப்பூர் தெற்கு தொகுதியில் அதிமுக- திமுக வேட்பாளர்கள் குறைவான வாக்கு வித்தியாசத்தில் மாறி மாறி முன்னிலை வகித்து வருவதால், கடும் இழுபறி நீடித்து வருகிறது.
திருப்பூர் தெற்கு தொகுதியில் சிட்டிங் அதிமுக எம்எல்ஏ சு.குணசேகரன், திமுக சார்பில் க.செல்வராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஆரம்பம் முதலே வாக்கு எண்ணிக்கையில் இந்தத் தொகுதியில் கடும் போட்டி நிலவியது. ஒவ்வொரு சுற்றிலும் வாக்குகள் எண்ணிக்கை 100க்குக் குறைவாக இருந்ததால், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் மத்தியில் கடும் பரபரப்பு எழுந்தது.
5-ம் சுற்று முடிவில் அதிமுக 11,544 வாக்குகளும், திமுக 11,581 வாக்குகளும் பெற்றன. மக்கள் நீதி மய்யம் 1,914 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 2,509 வாக்குகளும் பெற்றன. தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் மாநகராட்சி மேயர் அ.விசாலாட்சி வெறும் 274 வாக்குகளைப் பெற்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
5 மற்றும் 6-ம் சுற்றுகளில் திமுகவும், 7 மற்றும் 8-வது சுற்றுகளில் அதிமுகவும் முன்னிலை வகித்தன. 9-ம் சுற்று முடிவில் திமுக முன்னிலை வகித்துள்ளது.
ஒவ்வொரு சுற்றிலும் அதிமுக மற்றும் திமுக மாறி மாறி முன்னிலை பெற்று வந்த நிலையில், 9-ம் சுற்று முடிவில் 27 வாக்குகள் அதிகம் பெற்று திமுக முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT