Published : 02 May 2021 12:48 PM
Last Updated : 02 May 2021 12:48 PM
புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட ஏனாம் தொகுதியில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் 3-வது சுற்று நிலவரப்படி 673 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான ரங்கசாமி தட்டாஞ்சாவடி மற்றும் ஏனாம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். ஏனாம் தொகுதியில் ரங்கசாமியை எதிர்த்து காங்கிரஸ் ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளர் கொள்ளப்பள்ளி சீனிவாஸ் அசோக் களம் காண்கிறார்.
இன்று காலை முதல் கட்ட வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் ஏனாம் தொகுதியில் முதல் சுற்று முடிவில் ரங்கசாமி 1,174 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளர் 1036 வாக்குகளும் பெற்றனர். இதில் 138 வாக்குகள் வித்தயாசத்தில் ரங்கசாமி முன்னிலை பெற்றிருந்தார்.
2-வது சுற்று முடிவில் ரங்கசாமி 2,193 வாக்குகளும், சுயேச்சை 2,147 வாக்குகளும் பெற்றனர். இதன்படி 46 வாக்குகள் வித்தியாசத்தில் ரங்கசாமி முன்னிலை வகித்தார். 3-வது சுற்றின் முடிவில் ரங்கசாமி, 2,950 வாக்குகளையும், சுயேச்சை 3,623 வாக்குகளையும் பெற்றனர். 3-வது சுற்றின் முடிவின்படி படி சுயேச்சை வேட்பாளர் கொள்ளப்பள்ளி சீனிவாஸ் அசோக் 673 வாக்குகள் வித்தியாசத்தில் ரங்கசாமியைவிட முன்னிலை பெற்றார். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தற்போதைய நிலவரப்படி, என்.ஆர். காங்கிரஸ் 8 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும், மற்றவை 1 இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT