Published : 02 May 2021 10:53 AM
Last Updated : 02 May 2021 10:53 AM
அரியலூரில் மதிமுகவும் (திமுக கூட்டணி) ஜெயங்கொண்டத்தில் பாமகவும் (அதிமுக கூட்டணி) முன்னிலை வகித்து வருகின்றன.
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த இரண்டு தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள், அரியலூர் அடுத்த கீழப்பழுவூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று (மே.02) எண்ணப்பட்டு வருகின்றன. இங்கு 14 மேஜைகள் வீதம் 27 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.
அரியலூர் தொகுதியில் முதல் சுற்றில் மதிமுக முன்னிலை
இதில் அரியலூர் தொகுதி முதல் சுற்றில் எண்ணப்பட்ட வாக்குகளில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் வழக்கறிஞர் கு.சின்னப்பா முன்னிலையில் உள்ளார்.
வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரம்
மதிமுக (திமுக) கு.சின்னப்பா - 4,304,
அதிமுக தாமரை எஸ்.ராஜேந்திரன் - 3,263,
அமமுக மணிவேல் - 32,
நாம் தமிழர் சுகுணாகுமார் - 316,
ஐஜேகே ஜவகர் - 142,
நோட்டா - 44 வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதில் மதிமுக வேட்பாளர் சின்னப்பா, அதிமுக வேட்பாளர் தாமரை எஸ்.ராஜேந்திரனை விட 1,041 வாக்குகள் கூடுதலாகப் பெற்று முன்னிலையில் உள்ளார்.
ஜெயங்கொண்டம் தொகுதி முதல் சுற்றில் பாமக முன்னிலை
ஜெயங்கொண்டம் தொகுதிக்கான முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில்,
பாமக (அதிமுக) கே.பாலு - 3,761,
திமுக க.கண்ணன் - 3,406,
அமமுக சிவா - 55,
ஐஜேகே சொர்ணலதா - 78,
நாம் தமிழர் மகாலிங்கம் - 261
நோட்டா - 77 வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதில், பாமக வேட்பாளர் பாலு, திமுக வேட்பாளர் கண்ணனை விட 355 வாக்குகள் கூடுதலாகப் பெற்று முன்னிலையில் உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT