Published : 01 Dec 2015 09:14 AM
Last Updated : 01 Dec 2015 09:14 AM

தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி கவலைக்கிடம்: கல்லீரல், சிறுநீரகங்கள் செயலிழந்ததாக ஏ.சி.முத்தையா தகவல்

உடல்நலக் குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செட்டி நாட்டு அரசரின் வாரிசும் தொழி லதிபருமான எம்.ஏ.எம்.ராம சாமியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாய் இருப்பதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

86 வயதான எம்.ஏ.எம்.ராமசாமி கடந்த சில ஆண்டுகளாகவே சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்த நோய்க்கு வீட்டிலிருந்தபடியே சிகிச்சை எடுத்து வந்தார். அவருக்கு குடும்ப மருத்துவர் ஜெயச்சந்திரன் சிகிச்சை அளித்து வந்தார். இதனிடையே, எம்.ஏ.எம்.ராமசாமிக்கு ஆசனவாய் பகுதி யில் இருந்த கட்டி ஒன்று கடந்த ஓராண்டுக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அதற்குப் பிறகு அவருக்கு கண் அறுவை சிகிச்சையும் செய்யப் பட்டது. தொடர் சிகிச்சை காரண மாகவும் மூட்டு வலியால் சரியாக நடக்க முடியாமல் இருந்ததாலும் அரண்மனையைவிட்டு வெளியில் செல்வதை எம்.ஏ.எம். தவிர்த்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 20 நாட் களுக்கு முன்பு அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த 7-ம் தேதி, சென்னையில் உள்ள தனி யார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை குறித்து அவரது உதவியாளர்கள் ’தி இந்து’விடம் கூறியதாவது: ஆஸ் பத்திரியில் சேர்ப்பதற்கு முன் ஒரு வார காலமாக ஐயா எதுவுமே சாப்பிடல. எதைச் சாப்பிட்டாலும் வாந்தி எடுத்துட்டே இருந்தாரு. அவரால எழுந்து உட்காரவே முடியல. வயிறு வேற வீக்கமாகி ருச்சு. அவரை நேரில் பார்த்து கவலைப்பட்ட ஸ்பிக் நிறுவனத் தலைவர் ஏ.சி.முத்தையா, டாக்டர் சி.டி.அழகப்பனை வரவழைத்து அவருக்கு சிகிச்சை அளிக்க முயற்சி செய்தார்.

ஆனால், ஐயாவின் உடல் நிலையை பரிசோதித்த டாக்டர், ‘இவருக்கு வேற ஏதோ பிரச்சினை இருக்கு. உடனடியா உடம்பு முழுக்க ஸ்கேன் எடுக்கணும்’னு சொன்னார். அதுக்கப்புறம்தான் தனியார் மருத்துவமனையில அட்மிட் பண்ணுனாங்க. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

எம்.ஏ.எம்-மின் உடல்நிலை குறித்து நம்மிடம் கவலை தெரி வித்த ஏ.சி.முத்தையா, ’’எம்.ஏ.எம்- முக்கு கல்லீரல் முழுக்க பாதித்து விட்டது. 2 சிறுநீரகங்களுமே செயலிழந்துவிட்டன. ஆரம்பத் திலிருந்து ரத்த அழுத்தத் துக்கும் சர்க்கரைக்கும் மருந்து எடுத்துக்கொண்ட அவர், தனக்கு இதுபோன்ற பிரச்சினைகளும் இருப்பதை அறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளத் தவறிவிட் டார். மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வருகிறார்கள். உலகப் புகழ்பெற்ற கல்லீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் முகம் மது ரேலாவும் சிகிச்சை அளிக் கிறார்.

ஒருவாரம் முன்பு வரை வார் டில் வைத்திருந்தார்கள். அதுவரை கண்ணை மட்டும் திறந்து பார்த்தார். கடந்த ஒருவார காலமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சையளித்து வருகிறார்கள். அவரது உடல்நிலையில் முன் னேற்றம் இல்லை. நிலைமை கவலைக்கிடமாகத்தான் இருக் கிறது’’ என்று சொன்னார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x