Published : 14 Dec 2015 08:51 AM
Last Updated : 14 Dec 2015 08:51 AM

கனமழையால் 3 ஆயிரம் அரசு பேருந்துகள் பழுது: அதிகாரிகள் கணக்கெடுப்பில் தகவல்

தமிழகத்தில் தொடர்ந்த பெய்த கனமழையால் சேதமடைந்த சாலைகளில் மக்களின் நலன் கருதி பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்பட்டதால் 3 ஆயிரம் அரசு பேருந்துகள் சேதமடைந்துள் ளதாக போக்குவரத்து அதி காரிகள் நடத்திய கணக் கெடுப்பில் தெரியவந்துள்ளது.

தமிழக அரசு போக்குவரத்து துறையின் கீழ் சென்னை, விழுப்புரம், கோவை உட்பட மொத்தம் 8 போக்குவரத்து கழகங்கள் மூலம் சுமார் 22 ஆயிரத்து 800 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினமும் 2.5 கோடி பேர் இதில் பயணம் செய்து வருகின்றனர்.

சமீபத்தில் பெய்த கனமழையின் போது தனியார் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்ட நிலையில் அரசு பேருந்துகள் பெருமளவில் இயங்கின.

கனமழையால் சாலைகள் சேதமடைந்திருந்த நிலையில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு மேடு, பள்ளங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால், அவை பெருமளவில் சேதமடைந்துள்ளன.

அரசு போக்குவரத்து அதிகா ரிகள் இதுகுறித்து நடத்திய ஆய்வில் மாநிலம் முழுவதும் 3 ஆயிரம் பேருந்துகள் சேத மடைந்துள்ளதாக கண்டறியப் பட்டுள்ளது.

குறிப்பாக மாநகர போக்கு வரத்துக் கழகத்தில் மட்டும் சுமார் ஆயிரத்து 300 பேருந்துகள் சேதமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதுபற்றி அரசு போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘சமீபத்தில் பெய்த கனமழையின்போது, வருவா யை பொருட்படுத்தாமல் மக்களின் சேவையை மட்டுமே கருத்தில் கொண்டு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதனால் தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் அரசு பேருந்துகள் சேதமடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.

பழுதாகியுள்ள பேருந்துகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த 3 மாதங்களில் பணிகளை முடித்து முறைப்படி தகுதிச்சான்று பெற்று அந்த பேருந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், கனமழையினால் வழக்கமாக வரும் வருவாயிலேயே 13 சதவீத வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது போக்கு வரத்து துறைக்கு மேலும், இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை ஈடுகட்ட தமிழக அரசு நிதி அளிக்க வேண்டுமென வலியுறுத்தவுள்ளோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x