Published : 30 Apr 2021 12:22 PM
Last Updated : 30 Apr 2021 12:22 PM

திருமணம் முடிந்த புதுமணத் தம்பதி; சாலையில் நின்று கரோனா விழிப்புணர்வு

சென்னை, குரோம்பேட்டை அருகே திருமணம் முடிந்த கையோடு புதுமணத் தம்பதியினர் சாலையில் நின்று கரோனா தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது அங்கிருந்த மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரேஷ்மா மற்றும் சென்னையைச் சேர்ந்த பிரசன்னா ஆகியோரின் திருமண வரவேற்பு குரோம்பேட்டை, அஸ்தினாபுரத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் நேற்று எளிமையாக நடைபெற்றது. இந்நிலையில் அவர்கள் இருவரும் திருமணம் முடிந்த கையோடு கீழே இறங்கி வந்தனர்.

தம்பதி இருவரும் சாலையில் செல்லும் பொதுமக்களிடம் முகக் கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தினர். முகக் கவசம் அணியாமல் வந்த சிலரிடம் மணமகனும் மணமகளும் சேர்ந்து முகக் கவசத்தை வழங்கியதுடன், கரோனா பாதிப்பு குறித்து விளக்கிக் கூறினர்

முகக் கவசம் அணியாமல் நடந்து வந்த, இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வந்த நபர்களிடம் மணமகன் கூறும்போது, கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. குறிப்பாக இரண்டாவது அலையில் நோய்ப் பரவல் தீவிரமாக உள்ளது.

பொது இடங்களுக்கு வரும்போது தயவுசெய்து முகக் கவசம் அணியுங்கள். உங்களின் நலன் மற்றும் பிறரின் நலனுக்காகத் தயவுசெய்து முகக் கவசம் அணியுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். திருமணம் முடிந்த கையோடு புதுமணத் தம்பதியினர் சாலையில் நின்று கரோனா தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது அங்கிருந்த மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x