Published : 28 Apr 2021 07:41 PM
Last Updated : 28 Apr 2021 07:41 PM

கோவிட் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிய 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

கோப்புப் படம்

சென்னை

தமிழகம் முழுவதும் ஆக்சிஜன், படுக்கைகள் தேவையைக் கண்காணிக்கவும் அத்தியாவசிய மருந்துகள் இருப்பினைக் கண்காணிக்கவும் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாகத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''தமிழகத்தில் தற்போது பெருகி வரும் கரோனா வைரஸ் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் பெருநகர மாநகராட்சிப் பகுதிகளில் நோய்த்தொற்றைக் குறைக்கும் பொருட்டு மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திற்கும் கள அளவிலான குழுக்கள் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்புக் குழுக்கள் அமைத்துக் கண்காணிக்கப்படுகின்றன.

பொது சுகாதாரம் மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகத்தில் இயங்கிவரும் கட்டுப்பாட்டு அறையில் மாநில அளவில் மேற்கொள்ளப்படும் பெருந்தொற்று தடுப்புப் பணியில் 4 இந்திய ஆட்சிப்பணி பயிற்சி அலுவலர்களைச் சுழற்சி முறையில் பணியாற்ற ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

கோவிட் கட்டுப்பாட்டு அறையில் ஏப்ரல் 29 முதல் மே 12 வரை பணிபுரிய கீழ்க்காணும் இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள், அவர்களுக்கு நேராக குறிப்பிடப்பட்டுள்ள பணிகளை மருத்துவப் பணிகள் கழகத்துடன் இணைந்து பணிபுரிய ஆணையிடப்பட்டுள்ளது.

அனாமிகா ரமேஷ் ஐஏஎஸ்- பிராணவாயு தேவையைக் கண்காணித்தல்

கெளரவ் குமார் ஐஏஎஸ்- அத்தியாவசிய மருந்துகள் இருப்பினைக் கண்காணித்தல்

ஆர்.ஐஸ்வர்யா ஐஏஎஸ், கட்டா ரவி தேஜா ஐஏஎஸ்- மருத்துவமனைகள் படுக்கை இருப்பினைக் கண்காணித்தல்''.

இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x