Published : 23 Dec 2015 09:49 AM
Last Updated : 23 Dec 2015 09:49 AM

பாஸ்போர்ட் அலுவலகத்தில் நூலகம்: காத்திருப்போரை புத்தக வாசிப்பாளராக்க புது முயற்சி

மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க, திருத்தம் செய்ய வரும் பொதுமக்கள், அங்கு காத்திருக்கும் நேரத்தில், அவர்களையும் புத்தக வாசிப்பாளராக்க பொது நூலகத் துறை புது முயற்சியாக அங்கும் நூலகம் அமைக்க உள்ளது.

பொது நூலகத் துறை பொது மக்களிடம் புத்தகம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த, நூலகங் களை நவீனப்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகள், குழந்தை கள், போட்டித் தேர்வுக்கு தயாராவோர் என ஒவ்வொரு பிரிவினருக்கும் நூலகங்களில் தனித்தனி பிரிவு படிப்பகங் களையும், அவரவர் ரசனைக்கு ஏற்ப வாசிக்க புத்தகங்களை அந்த படிப்பகங்களில் வாங்கி வைத்துள்ளது. தற்போது, அடுத்தகட்டமாக முக்கிய அரசு அலுவலகங்களில் பல்வேறு பயன் களுக்காக வந்து காத்திருக்கும் பொதுமக்களை புத்தக வாசிப்பா ளராக்க அங்கு நூலகங்களை அமைக்க முடிவு செய்துள்ளது.

இந்த திட்டத்தின்கீழ், முதற்கட்ட மாக சென்னை, கோவை, திருச்சி பாஸ்போர்ட் அலுவலகங்களில் காத்திருப்போருக்காக பொது நூலகத்துறை ஏற்கனவே நூலகங்கள் அமைத்து செயல் படுத்தி வருகிறது. தற்போது, மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் இம்மாத இறுதியில் நூலகம் அமைக்கப்படுகிறது.

இதுகுறித்து மதுரை மாவட்ட நூலக அதிகாரி சி.ஆர். ரவீந்திரன் கூறியதாவது: பாஸ்போர்ட் அலுவ லகங்களில் தினமும் நூற்றுக் கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இவர்களுடைய விண்ணப்பங்களை பரிசோதனை செய்து விசாரிக்க குறைந்தபட்சம் ஒவ்வொரு நபருக்கும் 5 நிமிடங்கள் முதல் 10 நிமிடங்கள் வரை ஆகிறது. அதுவரை, அவர்கள் பாஸ்போர்ட் அலுவலகத்தில் காத்திருக்க வேண்டும். அந் நேரத்தை வீணாக்காமல் இருக்க, அவர்களையும் புத்தக வாசிப்பா ளராக்க கிளை நூலக அளவில் அங்கு புதிய நூலகம் அமைக்கப் படுகிறது.

இதற்காக, அங்கு தனி அறை தயார் செய்யப்படுகிறது. இந்த நூலகத்தில் வைப்பதற்காக 5 ஆயிரம் புத்தகங்கள் நன்கொடை மூலம் வாங்கப்படுகிறது. இந்த புத்தகங்கள், பெரும்பாலும் பொது அறிவு, வரலாறு, நாவல் உள்ளிட்ட தமிழ் மற்றும் ஆங்கில மொழி புத்தகங்களாக இருக்கும். மேலும், தினசரி நாளிதழ்கள், வார இதழ் களும் வாங்கி வைக்கப்பட உள்ளது. பாஸ்போர்ட் அலுவலகம் செயல்படும் நேரத்தில் மட்டுமே இந்த நூலகம் செயல்படும். இதற்காக அங்கு ஒரு நூலகர் பணி அமர்த்தப்படுவார். இந்த நூலகம் மூலம், குறைந்தபட்சம் இந்த அலுவ லகத்துக்கு வருவோரிடம் வாசிப்பு பழக்கம் ஏற்படுத்த திட்டமிடப் பட்டுள்ளது. தொடர்ந்து மற்ற அரசு அலுவலகங்களிலும், இதுபோன்ற நூலகங்களை ஏற்படுத்த பொது நூலகத்துறை திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x