Published : 27 Apr 2021 04:50 PM
Last Updated : 27 Apr 2021 04:50 PM
திருச்சி மாவட்டத்தில் தொகுதி வாரியாக நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை சுற்றுகள் குறித்த விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளுக்கு ஏப்.6-ம் தேதி 3,292 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து, வாக்குப்பதிவுக்குப் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 4 வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்தி முழு நேரக் காவல் போடப்பட்டுள்ளதுடன், கண்காணிப்பு கேமரா மூலமாகவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், 9 தொகுதிகளிலும் நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை சுற்றுகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான எஸ்.திவ்யதர்ஷினி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
''திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு ஆகிய தொகுதிகளுக்கு ஜமால் முகம்மது கல்லூரியிலும், லால்குடி, மண்ணச்சநல்லூர் ஆகிய தொகுதிகளுக்கு சமயபுரம் கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியிலும், முசிறி, துறையூர் ஆகிய தொகுதிகளுக்கு கண்ணனூர் இமயம் பொறியியல் கல்லூரியிலும், மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் ஆகிய தொகுதிகளுக்கு திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. ஒவ்வொரு தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்திலும் தலா 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தொகுதி வாரியாக நடைபெறும் வாக்கு எண்ணிக்கை சுற்றுகள் விவரம்:
மணப்பாறை 30, ஸ்ரீரங்கம் 32, திருச்சி மேற்கு 28, திருச்சி கிழக்கு 27, திருவெறும்பூர் 30, லால்குடி 22, மண்ணச்சநல்லூர் 25, முசிறி 24, துறையூர் (தனி) 23 என 9 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை மொத்தம் 241 சுற்றுகளில் நடைபெறவுள்ளது''.
இவ்வாறு ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT