Published : 25 Apr 2021 08:11 PM
Last Updated : 25 Apr 2021 08:11 PM
தமிழகத்தில் தடுப்பூசி, ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை, கரோனா பற்றி மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் அறிக்கை கொடுப்பதை எதிர்க்கட்சிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று விடுத்துள்ள அறிக்கை:
“கரோனா பற்றி மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் அறிக்கை கொடுப்பதை எதிர்க்கட்சிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகள் மாநில, மத்திய அரசோடு இணைந்து ஆக்கபூர்வமான முறையிலே கரோனா தொற்றை படிப்படியாக குறைக்கக் கூடிய உறுதியான நிலைப்பாட்டை ஏற்படுத்த வேண்டும்.
மாறாக பொது மக்களுக்கு சந்தேகம் ஏற்படும் வகையிலே, அச்சம் ஏற்படும் வகையிலேயே, கரோனா பற்றிய அறிக்கையைக் கொடுப்பது நன்மை பயக்காது . அதனை எதிர்க்கட்சிகள் நிறுத்திக்கொள்ள வேண்டும் .
தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடோ அல்லது ஆச்சிஜன் தட்டுப்பாடோ இல்லை. காரணம் சுகாதாரத்துறை திட்டமிட்டு மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக செயல்படுகிறது.
தடுப்பூசி அனைத்து நிலையங்களிலும் முறையாகப் பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. அதனை மக்கள் கோட்பாடுகளை பின்பற்றி பயன் அடைய வேண்டும். பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம். தவறான செய்திகளை நம்ப வேண்டாம் .
தமிழக அரசின் அதிகாரபூர்வமான சுகாதார துறையினுடைய அறிவிப்பை மட்டுமே நம்பவேண்டும். மேலும் மிகவும் முக்கியமாக தமிழக அரசு, ஆச்சிஜன் பற்றாக்குறை இருக்கக் கூடாது என்றும் கூடுதல் படுக்கைகளை கரோனா நோயாளிகளுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று, தாமதம் இல்லாமல் தடுப்பூசி போடும் பணியை அர்ப்பணிப்பு உணர்வோடு செய்துகொண்டு இருக்கிறார்கள்.
தற்பொழுது அவசியமான, அவசரமான, தேவை பொதுமக்களுக்கு 100 சதவிகிதம் ஒத்துழைப்போடு பணியாற்ற வேண்டும்.
அதனை பொதுமக்கள் முறையாகப் பயன்படுதிக்கொள்ள உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தமாகா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்”.
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT