Published : 24 Apr 2021 12:57 PM
Last Updated : 24 Apr 2021 12:57 PM
புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், புதிதாக 899 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை செயலாளர் அருண் இன்று (ஏப். 24) வெளியிட்டுள்ள தகவல்:
"புதுச்சேரி மாநிலத்தில் 6,030 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 702 பேருக்கும், காரைக்காலில் 109 பேருக்கும், ஏனாமில் 50 பேருக்கும், மாஹேவில் 38 பேருக்கும் என, மொத்தம் 899 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 52 ஆயிரத்து 271 ஆக அதிகரித்துள்ளது. இதில் மருத்துவமனைகளில் 1,354 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் 5,413 பேரும் என மொத்தமாக 6,767 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த புதுச்சேரியைச் சேர்ந்த 6 பேர், காரைக்காலைச் சேர்ந்த 2 பேர், மாஹேவைச் சேர்ந்த ஒருவர் என ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 737 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.41 சதவீதமாக உள்ளது.
இதனிடையே, இன்று 453 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 44 ஆயிரத்து 767 (85.64 சதவீதம்) ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் 7 லட்சத்து 58 ஆயிரத்து 547 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 6 லட்சத்து 84 ஆயிரத்து 81 பரிசோதனைகளுக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.
இதுவரை சுகாதாரப் பணியாளர்கள் 31 ஆயிரத்து 140 பேர், முன்களப் பணியாளர்கள் 18 ஆயிரத்து 315 பேர், பொதுமக்கள் 1 லட்சத்து 13 ஆயித்து 485 பேர் என, இரண்டாவது தவணை உட்பட 1 லட்சத்து 82 ஆயிரத்து 355 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT