Published : 24 Apr 2021 03:15 AM
Last Updated : 24 Apr 2021 03:15 AM
தமிழர் கலை, கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக காம ராசர் பல்கலை.யில் பாரம்பரிய பொருட்களுடன் பண்பாட்டு மையம் உருவாக்கப்பட உள்ளது.
தமிழர் கலை, கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியல் முறைகள், தொழில் சார்ந்த பொருட்கள் அன்றாட பயன்பாட்டில் இருந் தாலும், அவற்றில் பல்வேறு பொருட்கள் மறைந்தும், அழிந்தும் வருகின்றன. இவற்றில் பல தற் போதைய நாகரிக உலகில் மறு உருவாக்கம் பெற்று இருக்கின்றன. அவற்றின் அடிப்படை ஆதாரத்தை இளைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்க, மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.கிருஷ்ணன் முயற்சி மேற் கொண்டுள்ளார்.
இதற்காக தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் சத்தியமூர்த்தி தலைமையில் ஒரு குழுவை ஏற்படுத்தினார். இக்குழுவினர், நூற்றாண்டு கடந்த தமிழர் பாரம்பரியப் பொருட்கள், தொழில் முறை கருவிகள், உழவுத் தொழிலுக்குப் பயன்படுத்தி வந்த பொருட்கள் என ஏராளமான பொருட்களைச் சேகரித்துள்ளனர். இப்பொருட்களை வைத்து கலை, கலாச்சாரம், பண்பாடுகளை இளைய தலைமுறையினர், ஆய்வு மாணவர்கள், சுற்றுலா பயணிகள் தெரிந்துகொள்ளும் வகையில், பல்கலைக்கழகத்தில் பண்பாட்டு மையத்தை அமைக்கும் பணியில் துணைவேந்தர் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக மதுரை, சிவகங்கை, புதுக் கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பல்வேறு கிராமங்களுக்குச் சென்று கலைப் பொருட்களை சேகரித்து வருகிறோம். அருங்காட்சியகம் ஒன்றை ஏற்படுத்தி, அதில் இப்பொருட்களை வைக்க உள்ளோம். ஆய்வறிஞர்கள் மூலம் இப்பொருட்கள் குறித்த தக வல்களை தமிழ், ஆங்கிலத்தில் ஆவணப்படுத்தவும், ஆய்வு நோக்கில் கலைக்களஞ்சியம், அக ராதியை உருவாக்கி வெளியிடும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளோம். அரியவகைப் பொருட்களை வைத்திருப்பவர்கள், தங்களுக்கு அது தேவையில்லையெனில் எங்களிடம் வழங்கலாம் என்று கூறினார்.
உதவிப் பேராசிரியர் சத்தி யமூர்த்தி கூறுகையில், மண் பானைகள், நெல் வைக்க பயன்படும் குளுமை, துருத்தி, மரத்திலான சோறு வடிகட்டி, மீன் பிடிக்கும் பத்தக்கட்டை, மீன் வலைகள், மரக்கலப்பை, களைக் கொத்தி, கூட்டு மாட்டுவண்டி, மூங்கில் இடுக்கி, விவசாயத்துக்கு தண்ணீர் இறைக்கும் கமலை, சால், உரிகள், வெண்கல கும்பா, தயிர் மத்து, துடுப்பு, உணவு பொருட்களை பதப்படுத்தும் பீங்கான் பாத்திரம், அரிவாள், வாள், பல்லாங்குழி, தோல், கைவினைப் பொருட்கள் தயாரிப்பு கருவிகள், மண் குதிரைகள், இளவட்டக்கல், ஓலைச்சுவடிகள் போன்றவற்றை சேகரித்துள்ளோம். பல்கலைக்கழக வளாகத்தில் விரைவில் அமையவிருக்கும் தமிழ் பாரம்பரியப் பண்பாட்டு மையத்தில் வைக்க 200-க்கும் மேற்பட்ட பழமையானப் பொருட்களை சேகரித்துள்ளோம்.
இப்பொருட்களை தற்காலி கமாக பல்கலைக்கழக வளா கத்தில் பழைய கட்டிடத்தில் வைத்துள்ளோம். சமீபத்தில் பல் கலைக்கழகத்துக்கு ஆய்வுக்காக வந்த ‘நாக்’ கமிட்டியினர் இப் பொருட்களை பார்வையிட்டு வியந்து பாராட்டினர் என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT