Published : 22 Apr 2021 12:04 PM
Last Updated : 22 Apr 2021 12:04 PM
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று இரண்டாவது டோஸ் கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 9-ம் தேதி சென்னை, காவேரி மருத்துவமனையில் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அப்போது, தகுதி பெற்ற அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதனிடையே, இந்தியாவில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஸ்டாலின் இன்று (ஏப். 22) காவேரி மருத்துவமனையில் இரண்டாவது டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இதையடுத்து, தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில், "இரண்டாவது டோஸ் கரோனா தடுப்பூசி இன்று எடுத்துக்கொண்டேன். இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாகப் போட்டுக் கொள்ளவும். வேறு உடல் பாதிப்பு உள்ளவர்கள் எனில், தங்கள் மருத்துவரை கலந்தாலோசனை செய்துவிட்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ளவும்!
நம்மையும், நாட்டு மக்களையும் பாதுகாப்போம்!" எனப் பதிவிட்டுள்ளார்.
இரண்டாவது டோஸ் #CovidVaccine இன்று எடுத்துக் கொண்டேன்.
இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக் கொள்ளவும். வேறு உடல் பாதிப்பு உள்ளவர்கள் எனில் தங்கள் மருத்துவரை கலந்தாலோசனை செய்துவிட்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ளவும்!
நம்மையும் - நாட்டு மக்களையும் பாதுகாப்போம்! pic.twitter.com/SeWWQGtv50— M.K.Stalin (@mkstalin) April 22, 2021
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT