Published : 21 Apr 2021 02:22 PM
Last Updated : 21 Apr 2021 02:22 PM
குன்னுார் அட்டடி பகுதியில் பாறையின் மீது அமர்ந்திருந்த சிறுத்தையை மக்கள் பார்த்து வியப்படைந்தனர்.
நீலகிரி மாவட்டம் குன்னுார் அட்டடி பகுதி அடர்ந்த வனப்பகுதி மற்றும் தேயிலை தோட்டங்களை ஒட்டி உள்ளது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி வன விலங்குகள் நடமாட்டம் உள்ளது. இங்குள்ள தேயிலை தோட்டங்களில் பகல் நேரங்களிலேயே காட்டெருமை கூட்டம் நடமாடும். இதனால் தேயிலை தோட்டங்களில் வேலை பார்க்கும் பணியாளர்கள் அச்சத்துடனே தேயிலை பறிப்பர்.
காட்டெருமைகள் மட்டுமல்லாமல் சிறுத்தைகள் குடியிருப்பு பகுதியில் நடமாடுகின்றன.
இந்நிலையில், இன்று (ஏப். 21) அட்டடி கிராமம் தேயிலை தோட்டம் அருகில் உள்ள பாறையின் மீது, சிறுத்தை அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. மூன்று மணி நேரத்துக்கும் மேல் அந்த சிறுத்தை அங்கிருந்து நகரவில்லை. இதனை மக்கள் பார்த்து வியப்படைந்தனர். வனவிலங்கு ஆர்வலர்கள் பலர் அதனை புகைப்படம் எடுத்தனர். தகவலின் பேரில் வனத்துறையினர் அங்கு வந்து, இடையூறு ஏற்படாமல் இருக்க, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT