Published : 24 Dec 2015 11:03 AM
Last Updated : 24 Dec 2015 11:03 AM
மக்களிடையே சுகாதார விழிப் புணர்வை ஏற்படுத்துவதற்காக மாறுவேடங்களில் வலம் வருகிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த மருத் துவ பணியாளர் என்.சங்கரன்(50). மக்களின் நலனை முன்னிறுத்தி நடத்தப்படும் இந்த வித்தியாசமான விழிப்புணர்வு பிரச்சாரத்துக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
புகையிலையால் தீங்கு ஏற்படு வது குறித்து விழிப்புணர்வு ஏற் படுத்த அரக்கன் வேடமிட்டு கையில் மிகப்பெரிய சிகரெட்டுடன் செல்கிறார். போலியோ சொட்டு மருந்தின் அவசியத்தை வலியுறுத்தி உடல் முழுவதும் இலை, தழை களைக் கட்டிக்கொண்டு ஆதி மனிதனைப் போல செல்கிறார். டெங்கு காய்ச்சல் பரவுகிறதா? “டெங்கு காய்ச்சல் வருகிறது, மக்களே உஷார்” என முழக்கமிட்டு கோடாங்கி வேடத்தில் குடியிருப்பு பகுதிகளில் வலம் வருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் வட்டார மருத்துவ மேற் பார்வையாளராகப் பணியாற்றும் சங்கரன்தான் இந்த வித்தியாசமான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத் துகிறார். தன்னால் முடிந்த அளவுக்கு சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதன் முனைப்பே இந்த மாறுவேட பிரச் சாரத்துக்கு மூலகாரணம். உடல் நலம், சுற்றுப்புற நலனைப் பாது காப்பதற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் கணீரென்று ஒலிக்கும் இவரது குரல் கும்பகோணம் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு வெகுவாகப் பரிச்சயம். வெறும் பிரச்சார பேச்சு மட்டுமல்ல பாடவும் பாட்டுக்கு ஏற்றபடி ஆடவும் செய்வார். சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே இவரது நோக்கம்.
மாறுவேடத்துக்கென ஆகும் செலவை தனது சொந்த பணத்திலிருந்தே செலவிடுகிறார். இதுகுறித்து சங்கரன் நம்மிடம் பேசும்போது, ‘‘எனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பொது மக்களிடம் நல்ல கருத்துகளை பதிவு செய்கிறேன். எனது பணியை மனதார நேசித்து செய்வதால் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆர்வத் துடனும் ஈடுபட முடிகிறது.
பிரச்சாரம் செய்வது மட்டு மல்லாமல் களத்தில் இறங்கியும் பணியாற்றுவேன். எனக்கு என்னுடைய துறை அதிகாரிகளும், பணியாளர்களும் முழு ஒத்துழைப்பு தருகின்றனர்.
இளவயது திருமணம் கூடாது என்பதை வலியுறுத்தி கும்பகோணத் தில் மாணவர்கள் மத்தியில் முதிய வர் வேடத்தில் நடித்தது, புகை யிலையால் பைத்தியம் ஆனவர் போல நடித்தது, பிளாஸ்டிக் பைகளைத் தவிர்க்க வேண்டி கேரி பேக் போல பெரிய பையைத் தயாரித்து அதனுள் நுழைந்து கொண்டு நடித்தது போன்றவை மக்களிடம் வரவேற்பு பெற்ற வேடங்களாகும்’’ என்றார்.
வரவுள்ள கும்பகோணம் மகா மக திருவிழாவை முன்னிட்டு மக்களி டையே சுகாதாரத்தை வலியுறுத் தும் பல்வேறு வேடங்கள் போடவுள்ளதாக உற்சாகமுடன் தெரிவிக்கிறார் சங்கரன்.
சங்கரன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT